140 அடியை கடந்த முல்லை பெரியாறு: முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

140 அடியை கடந்த முல்லை பெரியாறு: முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
X

முல்லை பெரியாறு அணை.

முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 140 அடியை கடந்துள்ளதால் கேரளாவிற்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதய நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 4400 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 900ம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கேரள பகுதி வழியாக நீர் வெளியேற்றப்படவில்லை.

அணையின் நீர் மட்டம் 140 அடியை கடந்து உயர்ந்து கொண்டுள்ளது. இதனால் கேரள பகுதிக்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையில் இதே போன்று கடந்த மாதம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, கேரளா வழியாக தண்ணீர் வீணாக திறக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இது கண்டனத்திற்கு உரியது.

அணையில் ரூல் கர்வ் முறைப்படி 142 அடி தண்ணீர் தேக்க வேண்டும் என வலியறுத்தி உள்ளனர். கனமழை தொடர்ந்து இதே நிலை நீடித்தால் அணை நீர் மட்டம் நாளையே கூட 142 அடியை எட்டும் வாய்ப்புகள் உள்ளது என பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்