தேனி கலெக்டரின் கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை: விவசாயிகள் முறையீடு
தேனி கலெக்டர் முரளீதரனிடம் ஐந்து மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராஜசேகர், முதன்மை செயலாளர் இ.சலேத்து, பொதுச் செயலாளர் பொன்.காட்சிக்கண்ணன், துணைச் செயலாளர் ராதாகணேசன், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் உட்பட விவசாயிகள் இன்று தேனி கலெக்டரை நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், முல்லைப்பெரியாறு அணைக்கு தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி சென்று வரும் கேரள அரசியல்வாதிகள், உளவுப்போலீசாரை கண்டித்து தடுத்து நிறுத்த வேண்டும். அணைக்கு வருபவர்களின் முழு விவரம் குறித்த பதிவேட்டை தமிழக பொதுப்பணித்துறை முறையாக பரமாரிக்கவில்லை.
எனவே அணையினை தேனி கலெக்டர் நேரடியாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தேக்கடி புலிகள் காப்பக சோதனை சாவடியை தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள் குடியிருப்பினை தாண்டி அமைக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணைக்கு செல்லும் வல்லக்கடவு ரோட்டினை தடையின்றி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பயன்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மலைமாடுகளை வனத்தில் மேய்க்க கோர்ட் விதித்த தடையில் இருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என இவ்வாறு கூறியிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu