முல்லை பெரியாறு அணை அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
முல்லை பெரியாறு அணை பைல் படம்
முல்லை பெரியாறு அணையில் தற்போது பணிபுரியும் அதிகாரிகள் அத்தனை பேரையும் கூண்டோடு மாற்ற வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்க நிர்வாகிகள்ள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் தற்போது பணிபுரியும் தமிழக அதிகாரிகளிடம் பொறுப்புணர்வு ஏதும் இல்லை. கடந்த மாதம் 29ம் தேதி முல்லை பெரியாறு அணையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர்கள் முழுமையாக தமிழக அரசுக்கு தெரிவித்தார்களா என்பது கூட தெரியவில்லை.
தமிழக அரசிடம் சம்பளம் வாங்கும் அவர்கள், தமிழக அரசியல்வாதிகளுக்கும் ஒரு சல்யூட் அடிக்கின்றனர். கேரள அரசியல்வாதிகளுக்கும் ஒரு சல்யூட் அடிக்கின்றனர். தங்களது பொறுப்புணர்வு என்ன? பணித்தன்மை என்ன? தமிழக அரசுக்கு நாம் எப்படி விசுவாமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு போல், காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு போல மக்களின் மனங்களை துல்லியமாக எடை போடும் அதிகாரிகளை, தமிழக அரசு உரிய இடத்தில் அமர வைக்க வேண்டும். தற்போது முல்லை பெரியாறு அணையில் உள்ள தமிழக அதிகாரிகளிடம் தமிழ் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மையும் இல்லை. சம்பளம் தரும் தமிழக அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளும் பொறுப்புணர்வும் இல்லை. எனவே இவர்களை கூண்டோடு மாற்றி வி்ட்டு, புதிய பொறுப்புள்ள அதிகாரிகளை தமிழக அரசு முல்லை பெரியாறு அணையினை நிர்வகிக்க நியமிக்க வேண்டும் என்று கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu