முல்லைப்பெரியாறு, வைகை அணைகள் திறக்கும் தேதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

முல்லைப்பெரியாறு, வைகை  அணைகள் திறக்கும் தேதி  விவசாயிகள் எதிர்பார்ப்பு
X

முல்லைப்பெரியாறு அணை. (பைல் படம்)

தேனி, மதுரை மாவட்டங்களின் பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு, வைகை அணையும் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 131 அடியை எட்டி உள்ளது. அணைக்கு விநாடிக்கு 777 கனஅடி நீர் வரத்தினை எட்டி உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 100 கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர் மட்டம் 67.03 அடியாக உள்ளது. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளது. பெரியாறு அணையில் 41.4 மி.மீ., தேக்கடியில் 18 மி.மீ., மழை பெய்தது. இதனால்நீர் வரத்து இன்னும் கூடும் நிலை காணப்படுகிறது.

கடந்த ஆண்டு தேனி மாவட்ட பாசனத்திற்கு முல்லை பெரியாறு அணை ஜூன் முதல் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆண்டு முல்லைப்பெரியாறு, வைகை அணைகளின் நீர் மட்டம் கடந்த ஆண்டை விட நல்ல முறையில் உள்ளது. எனவே முல்லைப்பெரியாறு அணை ஜூன் முதல் தேதியும், மதுரை கள்ளந்திரி பகுதி பாசனத்திற்காக ஜூன் 2ம் தேதி வைகை அணையும் திறக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்ய முடியும் என பொதுப்பணித்துறையும், வேளாண்மைத்துறையும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். வரும் மே 27ம் தேதி வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலெக்டர் பதிலளிக்க வசதியாக அணைகளை திறப்பதற்கான அரசு உத்தரவு வெளியாகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture