மீண்டும் 142 அடியை எட்டுமா முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்?

மீண்டும் 142 அடியை எட்டுமா முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்?

முல்லைப்பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் மீண்டும் 142 அடியை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடகிழக்கு பருமழை தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல, தேனி மாவட்டத்திலும் கடநத் சில நாள்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. தேனி மாவட்டம் முல்லைப்பெரியாறு அணையினை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழைப்பொழிவு இருக்கும். வடகிழக்கு பருவமழை சற்று குறைவாகவே இருக்கும். ஆனால் தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகவும், வடகிழக்கு பருவமழை அதிகமாகவும் இருக்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழையே வெளுத்துக்கட்டும். அப்போது பெரியாறு அணைப்பகுதியும் நல்ல மழைப்பொழிவினை பெறும்.

ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பெரியாறு அணைப்பகுதியில் பெரிய அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு கேரளாவில் கூட தென்மேற்கு பருவமழை கடந்தை ஆண்டுடன் ஒப்பிடுகையில் விட சற்று குறைவு தான். இருப்பினும் பெரியாறு அணைக்கு நீர் வரத்து இல்லாத அளவுக்கு மிகவும் கவனமாக கேரளா பார்த்துக் கொண்டது.

அதாவது பெரியாறு அணை, அதன் நீர் பிடிப்பு பகுதி, நீர் தேக்கப்பகுதி என ஒட்டுமொத்தமும் கேரள வனத்திற்குள் உள்ளது. கேரளாவில் எங்கெல்லாம் இருந்து பெரியாறு அணைக்கு நீர் வருகிறதோ எந்த நீரை கேரளா திட்டமி்ட்டே இடுக்கி வனப்பகுதிக்கு திருப்பி விட்டுள்ளது. இது பற்றி விவசாயிகள் கூட முழுமையாக அறியவில்லை என்பதே உண்மை.

தற்போதய சூழலில் முல்லைப்பெரியாறில் எவ்வளவு மழை பெய்தாலும், அணைக்கான நீர் வரத்து சிலஆயிரம் கனஅடிகள் தான் இருக்கும். அந்த அளவு கேரளா துல்லியமாக திட்டமிட்டு நீர் வரத்தினை முழுமையாக இடுக்கி அணை நோக்கி திருப்பி விட்டுள்ளது. அதனையும் மீறி நீர் வந்தாலும் அணை நீர் மட்டத்தை 142 அடியாக தேக்க விடாமல் தடுக்க 'ரூல்கர்வ்' முறையினை அமல்படுத்தி விட்டது. இதனை நீக்க தமிழக அரசும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுபோன்ற கெடுபிடிகளால் இந்த ஆண்டு இதுவரை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்க முடியவில்லை. இப்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையும், பெரியாறு அணைப்பகுதியில் மிகவும் குறைவாகவே பெய்கிறது. அதனால் நீர் வரத்தும் மிகவும் குறைவாகவே உள்ளது. நீர் மட்டம் மெல்ல, மெல்ல உயர்ந்து தற்போது தான் 137 அடியை தாண்டி உள்ளது.

இந்த முறையாவது அணை நீர்மட்டம் 142 அடியை எட்ட வேண்டும் என தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீர் மட்டம் மெல்ல உயர்வதாலும், அணையில் நீர் மட்டத்தை 142 அடியை தேக்க வேண்டிய வாய்ப்புகள் குறித்து பெரியாறு வைகை கண்காணிப்பு பொறியாளர் பழனிச்சாமி, செயற்பொறியாளர் சாம்இர்வீன், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர் ராஜகோபால் உட்பட பலர் ஆய்வு செய்தனர்.

அவர்கள் மெயின் அணை, பேபி அணை, கேரளாவிற்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர்கள், நீர்கசிவு காலரி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். நீர் கசிவு குறித்த முழுமையான தரவுகள் பெறப்பட்டு அணை மிகவும் பலமாக உள்ளது என உறுதி செய்யப்பட்டது. ஷட்டர்கள் அனைத்தும் இயக்கி பரிசோதனை செய்யப்பட்டன. மேலும் அணைப்பகுதிகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

Tags

Next Story