முல்லைப்பெரியாறு அணை விவகாரம்: கேரளாவிற்கு பாடம் புகட்டும் மு.க. ஸ்டாலின்

CM News Today | CM Latest News
X

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

CM News Today - முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் முதல் அமைச்சர் முக ஸ்டாலின் கேரள முதல்வருக்கு சரியான பாடம் நடத்தி வருகிறார்.

CM News Today - இதுவரை தமிழகம் பார்த்த முதல்வர்களில் மிகவும் பொறுமையானவர் என்ற பெயர் எடுத்து விட்டார் முதல்வர் ஸ்டாலின் என்பதை அடித்துச் சொல்ல முடியும். பல விஷயங்களில் அவர் காட்டி வரும் பொறுமை, நிதானம் மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது. குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் துணை அணையான பேபி அணையினை பலப்படுத்த தடையாக இருந்த மரங்களை வெட்ட கேரளா அனுமதி வழங்கிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

அவ்வளவு தான், ஒரு முதல்வர் நன்றி சொல்கிறாரே என்ற நாகரீகம் கூட இல்லாமல், 'தாம், துாம் என நடவடிக்கை எடுத்த பினராய் விஜயன், சம்பந்தப்பட்ட ஒரு ஐ.எப்.எஸ்., அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக முதல்வரை பெரும் சங்கடத்திற்கு உள்ளாக்கினார்'. அதனையும் அமைதியாக ஏற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்து கேரளாவில் நடந்த அந்த கட்சி மாநாட்டிற்கு பினராய்விஜயன் கொடுத்த அழைப்பினை ஏற்று சென்று அவரை மனமுவந்து பாராட்டினார்.

ஸ்டாலினின் இந்த செயல் அவரது மிக அரிய போற்றத்தக்க குணத்தை காட்டியது. அதே நேரத்தில் அரசியலிலும் தான் ஒரு சாணக்கியன், (கருணாநிதியின் மகனல்லவா) என்பதையும் நிரூபிக்க ஸ்டாலின் தவறவில்லை. முல்லைப்பெரியாறு அணைப்பிரச்சினையில் இனி கேரளாவிற்கு புரியும் பாஷையில் தான் பேச வேண்டும் என திடமாக முடிவு எடுத்து விட்டார். முதல்வர் கொடுத்த கண்ணசைவே தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள், துணைக்கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அத்தனை பேரையும் வறுத்து எடுத்து விட்டனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழக விவசாயிகளை தடுக்கவில்லை. முல்லைப்பெரியாறு அணை உரிமைக்காக போராடும் தமிழக விவசாயிகளை அதிகாரிகள் மூலம் ஊக்கப்படுத்தி வருகிறார். (இதையே தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாசெய்தார்). கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக போராடுபவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் கேரள அரசு எப்படி அந்த போராட்டத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடிக்கிறதோ? அதேபாணியினை முதல்வர் ஸ்டாலினும் கடைபிடிக்கிறார்.

தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆதரவாக போராடும் விவசாயிகளை போராட அனுமதித்து விட்டு, அவர்களை தமிழக அதிகாரிகள் மூலம் ஊக்கப்படுத்துவதோடு, (தமிழக விவசாயிகளுக்கு தற்போது தமிழக அதிகாரிகள் அதிகளவு மரியாதை தருகின்றனர்) இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லாதது போல் அமைதி காக்கிறார். இதன் விளைவு பிரிந்து கிடந்த தமிழக விவசாயிகள் ஒன்று சேர்ந்து தற்போது சுப்ரீம்கோர்ட் வாசலில் போய் நிற்கின்றனர். கேரளா எந்த திசையில் வந்தாலும், தகுந்த பதிலடி தருகின்றனர்.

இந்த நிலை இப்படியே நீடித்தால் முல்லைப்பெரியாறில் இழந்த அத்தனை உரிமைகளையும் பெற்று விடுவோம். அந்த நம்பிக்கையினை (முதல்வர் ஸ்டாலின்) தமிழக அதிகாரிகள் எங்களுக்கு கொடுத்துள்ளனர் என விவசாயிகள் உற்சாகத்துடன் பேசி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai based agriculture in india