முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு

முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு
X

முல்லை பெரியாறு அணை - கோப்பு படம் 

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், இன்று காலை 6 மணி நிலவரப்படி 141.05 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 3096 கனஅடி நீர் வரத்து உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைப்பகுதியில் 40.4 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. இதனால் நேரம் ஆக, ஆக அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

தற்போது அணையில் இருந்து விநாடிக்கு 2300 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணையில் நேற்று வரை விநாடிக்கு 5 ஆயிரம் கனகனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று இதன் அளவு விநாடிக்கு 2668 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3096 கனஅடியாக உள்ளது. நீர் மட்டம் 69.42 அடியாக உள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி உட்பட அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், அணைக்கு வரும் கூடுதல் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story