முல்லை பெரியாறு அணையில் 18வது நாளாக 142 அடி தண்ணீர்

முல்லை பெரியாறு அணையில் 18வது நாளாக 142 அடி தண்ணீர்
X

முல்லை பெரியாறு அணை - பைல் படம்.

முல்லை பெரியாறு அணையில் தொடர்ச்சியாக 18வது நாளை கடந்து 142 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு அணையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி, தொடர்ச்சியாக 18வது நாளாக 142 அடி தண்ணீர் தேங்கி உள்ளது. அதேபோல் 40 நாட்களை கடந்தும் அணை நீர் மட்டம் 140 அடிக்கு மேல் உள்ளது. இந்த தகவல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் மத்தியில் நிம்மதியை தந்துள்ளது.

அதேபோல் வைகை அணையின் நீர் மட்டம் இந்த ஆண்டு 4 மாதங்களை கடந்தும் முழு அளவில் நிரம்பி வழிகிறது. அணையின் நீர்மட்டம் 70.21 அடியாக உள்ளது. தேனி மாவட்டத்தில் இன்றுடன் ஐந்தாவது நாளாக மழை பெய்யவில்லை. இருப்பினும் வைகை அணைக்கு விநாடிக்கு 1600 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இது மிகவும் திருப்திகரமான நீர் வரத்து ஆகும். அணையில் இருந்து விநாடிக்கு 1100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story