/* */

142 அடியை நெருங்குது பெரியாறு அணை: மூல வைகையிலும் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மூல வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 142 அடியை நெருங்குகிறது

HIGHLIGHTS

142 அடியை நெருங்குது பெரியாறு அணை: மூல வைகையிலும் வெள்ளப்பெருக்கு
X

மேகலைப்பகுதியில் பெய்யும் மழையால் மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழைப்பொழிவு இருந்து வருகிறது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிபட்டியில் 6.8 மி.மீ., தேனி அரண்மனைப்புதுாரில் 2.2 மி.மீ., வீரபாண்டியில் 5.00 மி.மீ., மஞ்சளாறில் ஒரு மி.மீ., சோத்துப்பாறையில் 10 மி.மீ., வைகை அணையில் 2.2., மி.மீ., உத்தமபாளையத்தில் 3.6 மி.மீ., கூடலுாரில் 6.8 மி.மீ., பெரியாறு அணையில் 7.8 மி.மீ., தேக்கடியில் 23.6 மி.மீ., சோத்துப்பாறையில் 5.6 மி.மீ., மழை பெய்துள்ளது.

அதேபோல் மேகமலையிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சுருளி அருவியிலும், சின்னசுருளியிலும் மூல வைகையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியை தாண்டி உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக மட்டும் 69 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணை நீர் மட்டம் 66.27 அடியாக உள்ளது.

பெரியாறு அணைக்கு விநாடிக்கு 2100 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 141.40 அடியை தாண்டி உள்ளது. 142 அடியை நோக்கி உயர்ந்து வருகிறது.

இதனால் கேரளாவில் முல்லைப்பெரியாறு பாயும் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதே போல் மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகாநதி அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

இப்போது உள்ள சூழலில் முல்லைப்பெரியாறு அணை, வைகை அணைகள் நிரம்பி உள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இப்போது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. இதன் காரணமாக தடையின்றி முழுமையாக விளைச்சலை எடுத்து விடலாம். இந்நிலையில் மழையும் தொடர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாவட்டத்தில் அத்தனை கண்மாய்களும், ஆறுகளும், ஏரிகளும் குளங்களும் நிரம்பி காணப்படுகின்றன. அருவிகள், ஆறுகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறுகள், அருவிகள், கண்மாய்கள், குளங்களின் நீர் வரத்து விவரங்களை தொடர்ந்து கண்காணிக்குமாறும், வெள்ளம் வந்தால் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட நிர்வாகத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை மழையால் தேனி மாவட்டத்தில் சேதம் இல்லையென்றாலும், மாவட்ட நிர்வாகம் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான முழு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கிடையில் மழையால் சின்னமனுார், உத்தமபாளையம், பெரியகுளம் ஒன்றியங்களில் விவசாய பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர் சேத விவரங்களை மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Updated On: 15 Dec 2022 3:55 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?