முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை
முல்லைப்பெரியாறு அணை பைல் படம்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய நீர் வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. இதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முல்லைப்பெரியாறு தொடர்பான வழக்கில், மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், இரு மாநில நலன் கருதி, முல்லைப்பெரியாறு அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, தமிழ்நாடு அரசுக்கு அனுமதியும், ஒத்துழைப்பும் வழங்க கேரள அரசுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், அணை பிரச்னையில் சுமூகமாக பேசித் தீர்வு காண வேண்டும் என்று இரு மாநில அரசுக்கும் முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழு தலைவர் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மார்ச் 28ஆம் தேதி அடுத்த கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நீர் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் திருப்திகரமாக உள்ளது என்று மத்திய நீர் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மத்திய நீர் வள ஆணையத்தின் இந்த அறிக்கை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகளிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இனியாவது கேரள அரசு உண்மை நிலையை புரிந்து கொண்டு , பொய் செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும். அணையை பலப்படுத்தும் பணிகளை செய்ய தமிழக அரசுக்கு அனுமதி வழங்க வேண்டும். அணையின் நீர் மட்டத்தை நுாற்றி நாற்பத்தி இரண்டு அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu