138 அடியை எட்டியது முல்லை பெரியாறு அணை

பைல் படம்
Mullai Periyar Dam Level Today -தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையில் 30 மி.மீ., தேக்கடியில் 15 மி.மீ., மழை பெய்தது. இந்த மழையால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் மட்டம் 137.90 அடியை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 138 அடியை எட்டி விட்டது.
வைகை அணை நீர் மட்டமும் 70.57 அடியாகவே நீடிக்கிறது. மொத்த நீர் மட்ட உயரமே 71 அடியாக உள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு நீர் மட்டம் 70.57 அடியிலேயே பராமரிக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu