முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 141.50 அடியை தாண்டி அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கு நீர் வரத்து அதிகரித்து ஆற்றில் விநாடிக்கு ஐந்து ஆயிரத்து நுாற்றி பத்தொன்பது கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில், நேற்று மதியமும், இரவும் பலத்த மழை பெய்தது. போடியில் 129.2 மி.மீ., கூடலுாரில் 51.4 மி.மீ., வீரபாண்டியில் (தேனியில்) 47 மி.மீ., ஆண்டிபட்டியில் 17.6 மி.மீ., பெரியாறு அணையில் 19.4 மி.மீ., தேக்கடியில் 35.8 மி.மீ., உத்தமபாளையத்தில் 18.2 மி.மீ., பெரியகுளத்தில் 10 மி.மீ., மழை பதிவானது.
இந்த மழையால், முல்லை பெரியாறு அணைக்கு விநாடிக்கு 4169 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. நேரம் செல்ல செல்ல நீர் வரத்து இன்னும் உயரும். அணையில் இருந்து விநாடிக்கு 2300 கனஅடி நீர் தமிழகப்பகுதி வழியாக திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 141.50 அடியை தாண்டி விட்டது. ரூல்கர்வ் முறைப்படி இன்று முதல், ஆறாவது நாளில் நீர் மட்டம் 142 அடி தேக்க முடியும். மழை தொடர்வதால் 142 அடியை எட்டி விடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வைகை அணைக்கு நீர்வரத்து கடுமையாக அதிகரித்துள்ளது. விநாடிக்கு நீர் வரத்து 2649 கனஅடி என மதிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் இதனை விட மிகவும் அதிகளவு நீர் வந்து கொண்டுள்ளது. இதனால் அணையில் இருந்து விநாடிக்கு 5119 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 69.49 அடியாக உள்ளது. மஞ்சளாறு, சோத்துப்பாறை, சண்முகாநதி அணைகளும் முழுமையாக நிரம்பி உள்ளதால், அணைக்கு வரும் நீர் முழுக்க அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu