வலுக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.. வரிசைகட்டும் கட்சிகளின் போராட்டம்

பைல் படம்
முல்லை பெரியாறு அணையில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்து நாளை நவ.,8ம் தேதி தமிழக பா.ஜ.கா., சார்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் கம்பத்தில் அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. ஓ.பி.எஸ்., தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோரை திரட்டி தங்கள் பலத்தை வெளிப்படுத்தி, விவசாயிகளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் அ.தி.மு.க. மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் நவ.,14ம் தேதி வரை தொடர் போராட்டங்களுக்கான அறிவிப்புகள் இதுவரை வெளியாகி உள்ளது. நேற்று இடுக்கி மாவட்டத்தை தேனி மாவட்டத்துடன் இணைக்க வலியுறுத்தி கூடலுாரிலும், கேரள அரசின் அத்துமீறல் போக்கை கண்டித்து இன்று மேலுாரிலும் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu