பெண்கள் அதிகம் ஓட்டளித்த தேனி லோக்சபா தொகுதி..!

பெண்கள் அதிகம் ஓட்டளித்த  தேனி லோக்சபா தொகுதி..!
X

பெண் வாக்காளர்கள் (கோப்பு படம்)

தேனி லோக்சபா தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிகம் ஓட்டளித்துள்ளனர்.

லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் 69.87% ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தேனி லோக்சபா தொகுதியில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 16,22,949. இதில் 11,33,950 வாக்காளர்கள் மட்டுமே தங்களது ஒட்டினை பதிவு செய்துள்ளார்கள்.

தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7,97,201 பேர் உள்ளனர். இவர்களில் 5,51,335 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர், மொத்தம் 8,25,527 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,81,963 பேர் மட்டுமே ஓட்டளித்துள்ளனர். ஆக தொகுதி சராசரியின் படி, ஆண்களை விட 30, 628 பெண்கள் அதிகமாக ஓட்டளித்துள்ளனர்.

தேனி லோக்சபா தொகுதியில் சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, கம்பம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரங்களை பார்க்கலாம்.

சோழவந்தானில் 74.98%, உசிலம்பட்டியில் 70.95%, ஆண்டிபட்டியில் 70.82%, பெரியகுளத்தில் 66.01%, போடிநாயக்கனூரில் 71.06%, கம்பத்தில் 66.10% சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளது. தொகுதியின் சராசரி ஓட்டுப்பதிவு 69.87% சதவீதமாக உள்ளது. இது மிகவும் குறைந்த அளவு என்பதால் அரசியல் கட்சியினர் அத்தனை பேரும், ஓட்டுப்பதிவு குறைய காரணம் என்ன என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது