மதுரை- தேனி அகல ரயில் பாதையை 26-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்

மதுரை- தேனி அகல ரயில் பாதையை 26-ம் தேதி மோடி தொடங்கி வைக்கிறார்
X
வருகிற 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி மதுரை- தேனி அகல ரயில் பாதையில் ரயில்போக்குவரத்தினை தொடங்கி வைக்கிறார்.

தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் நடைபெறும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் மே 26 ஆம் தேதி தமிழகம் வருகிறார். இந்நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு- சென்னை 4 வழி விரைவுச்சாலையின் 3ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மதுரவாயல் மற்றும் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம். மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி வரையிலான கிழக்கு கடற்கரைச் சாலையை அகலப்படுத்தும் திட்டம், மதுரை- தேனி அகல ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் அமைய உள்ள மல்ட்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்கா.ஒசூர்-தருமபுரி இடையேயான 2ம் மற்றும் 3ம் கட்ட நெடுஞ்சாலைக்கும். மீன்சுருட்டி-சிதம்பரம் இடையிலான புதிய சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் மத்திய நகர்ப்புற வீட்டுவசதித்துறை. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை,... ரயில்வே துறையின் சார்பில் முடிக்கப்பட்டுள்ள பணிகளையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!