தி.மு.க.வை குறி வைத்துள்ளாரா மோடி?

தி.மு.க.வை குறி வைத்துள்ளாரா மோடி?
X

பைல் படம்

Modi Targeting DMK in Tamil -தமிழக அரசியல் விஷயங்களை அறிந்து கொள்ள அண்ணாமலையை பிரதமர் மோடி தனது காரில் ஏற்றி ஒரு மணி நேரம் பயணம் செய்ததாக கூறப்படுகிறது

Modi Targeting DMK in Tamil -'கோ பேக்' மோடி என கடந்த ஆட்சியில் அதகளம் பண்ணிய தி.மு.க., தற்போது 'வெல்கம் மோடி' என்று டிரெண்டிங் செய்து வருகிறது. இதுவே மிகப்பெரிய கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது. ஒன்றிய அரசு என மத்திய அரசை வர்ணித்து வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட அத்தனை பேச்சாளர்களும், மோடி தமிழகத்தில் இருந்த போது, இந்திய பிரதமர் என வாயார புகழ்ந்தனர். பிரதமர் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமர் மோடி என்று தான் பேசினார்.

அதனை பா.ஜ.க,வினர் அத்தனை பேரும் ரசித்துக் கொண்டிருக்கும் போதே, மோடி தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலையை தனது காரில் ஏற்றிக் கொண்டு மதுரை வரை சென்றார். வானிலை மாற்றத்தால் தான் மோடி காரில் மதுரைக்கு பயணித்தார் என்ற வாதமெல்லாம் ஒரு பேச்சு தான். இது முன்னரே திட்டமிட்ட ஒரு விஷயமாகவே தெரிய வந்துள்ளது.

காரணம் இதே வானிலை இருந்த நிலையில் தான் மதுரையில் இருந்து பிரதமர் விமானம் புறப்பட்டு சென்றது. ஆக அண்ணாமலையுடன் பேச வேண்டும் என்பதற்காகவே மோடி இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார். அண்ணாமலைக்கு தி.மு.க.வினர் பகிரங்கமாக விடுக்கும் அச்சுறுத்தல்கள், தமிழகத்தில் நடைபெறும் வார்த்தை மோதல்கள் எல்லாம் பிரதமர் மோடி வரை சென்றுள்ளது. அதுவும் கோவை குண்டு வெடிப்பு விஷயத்தில் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என தி.மு.க. அமைச்சர்கள் பேசியது மோடியை கடுமையாக எரிச்சலைடைய வைத்துள்ளது.

குறிப்பாக பா.ஜ.க தமிழகத்தில் குறி வைக்கும் கொங்கு மண்டலம் வரும் லோக்சபா தேர்தலில் ஒரு போர்க்களமாகவே இருக்கும் என்ற கணிப்பு நிலவுகிறது. காரணம் கொங்கு மண்டலத்தை (42 சட்டசபை தொகுதிகள் கொண்டது கொங்கு மண்டலம்) தி.மு.க. இந்த முறை கைப்பற்றி ஆக வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பணியில் சூராதி சூரர் என்பது அத்தனை பேரும் அறிந்த விஷயம். அண்ணாமலையின் அறிவுத்திறன், செயல்திறன், தேர்தல் வியூகம், களப்பணி எதிலும் சந்தேகம் இல்லை. எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் செந்தில்பாலாஜி்க்கு இருக்கும் கட்சி உள்கட்டமைப்பு வசதி அண்ணாமலையிடம் இல்லாதது மிகப்பெரிய பின்னடைவு என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழலில் தேர்தல் களத்தில் தங்களுக்கு எதிராக களம் இறங்கும் பா.ஜ.க வினரை தி.மு.க.,வினர் நெருக்கடி கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளது. அப்படி நெருக்கடி கொடுத்தால், 'என்னை தாண்டி என் அண்ணாமலையை தொட்டுப்பார்' என்பது தான் மோடி தி.மு.க.வினருக்கு கொடுத்த அதிரடி மெசேஜ். ஆமாம். இனிமேல் அண்ணாமலைக்கோ, பா.ஜ.க தொண்டர் களுக்கோ தி.மு.க.,வோ... அல்லது தி.மு.க.வின் கூட்டணியினரோ எந்த நெருக்கடி கொடுத்தாலும், பாதுகாக்க பா.ஜ.க மேலிடம் நொடிப் பொழுதும் தயங்காமல் களம் இறங்கும் என்பது மோடி கொடுத்த மெசேஜ். தவிர அண்ணாமலை உருவத்தில் தான் தமிழகத்தில் பணிபுரிவதாக நினைத்துக் கொள்ளுங்கள் என பா.ஜ.க வினருக்கும், தமிழக வாக்காளர்களுக்கும் மோடி உணர்த்தியிருக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

காரணம் அண்ணாமலை தமிழகத்தில் தனிநபர் அல்ல. பா.ஜ.க என்ற உலகின் மிகப்பெரிய கட்சியின், உலகிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சியின் தமிழக பிரதிநிதி. அதுவும் மோடி என்ற 'பரமசிவன் கழுத்தில்' பாதுகாப்பாக அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிராக ஏதாவது செய்ய நினைத்தால், அவர்கள் கதி அதோ கதி தான் என்பதும் ஒரு வகை யான மறைமுக செய்தியாகும்.

வழக்கமாக கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகள், தனது ஒரு மாநில கிளையில் ஒரு நிர்வாகிக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைத்தால், அந்த நபருடன் தனி சந்திப்பு, விருந்து என கலந்து கொள்வார்கள். இதன் மூலம் தனது கம்பெனி நிர்வாகிகள், பணியாளர்களுக்கு இவர் தான் இந்த கம்பெனிக்கு நான் நியமித்துள்ள என் நம்பிக்கையை பெற்ற நபர். அவரது குரல் கிட்டத்தட்ட எனது குரல் போன்றது தான். அவரது பேச்சும், செயலும், நடவடிக்கைகளும் முழுமையாக எனது அனுமதி பெற்ற பின்பே நடக்கிறது என்பதை உணர்த்துவார்கள். அந்த நிர்வாகி உடனே அந்த கம்பெனியில் அசுர பலம் பெறுவார்.

அதனைத்தான் தற்போது மோடி செய்துள்ளார். தமிழகத்தின் அண்ணாமலையின் குரல் எனது குரல். அண்ணாமலையின் செயல் எனது செயல். அண்ணாமலையின் பேட்டி எனது பேட்டி. தமிழகத்தை பொறுத்தவரை அண்ணாமலையின் உருவத்தில் மோடி செயல்படுகிறார். அவர் செய்வது, சொல்வது அத்தனையும் மோடி தமிழகத்தை பொறுத்தவரை மோடி சொல்வதற்கும் செய்வதற்கும் ஒப்பானது. எனவே தமிழக அரசோ, அமைச்சர்களோ அண்ணாமலையை தமிழக பா.ஜ.க, தலைவராக மட்டும் பார்க்காமல்... தமிழகத்தின் மோடி என்ற நிலையில் பார்க்க வேண்டும். அதனை மீறி ஏதாவது தொல்லை கொடுத்தால் எனக்கு கொடுத்தது போல் நான் நினைக்க வேண்டியிருக்கும் என்பதை தி.மு.க.விற்கு உணர்த்தியுள்ளார் மோடி என்றும் அரசியல் நோக்கர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர். எது எப்படியோ, மோடியின் காரில் பயணித்ததன் மூலம் அண்ணாமலை தமிழகத்தில் ஒரு ஆளுமை மிகுந்த ஒரு தலைவராக உருவெடுத்து விட்டார் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ai and business intelligence