சீனாவில் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல்
பைல் படம்
சீனாவின் அணு விசையில் இயங்கும் அணு ஆயுதங்களுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் தைவான் ஜலசந்தி யில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தது. அந்த இடம் எங்களுக்குத்தான் சொந்தமானது என்று சீனா கூறி வரும் நிலையில், தைவான் நாடே உனக்கு சொந்தமில்லை என்று உலக நாடுகள் சொல்கிறது.
அதனால் அமெரிக்கா மற்றும் மற்ற நாட்டு போர் கப்பல்களை அனுமதிக்க சீனா மறுத்து வந்த வேளையில் அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பல் உள்ளே நுழைந்தது. அப்போது சீனா அதை எச்சரித்து திருப்பியனுப்பியது.
இப்படி அமெரிக்காவின் வலுவான விமானந்தாங்கி கப்பலை திருப்பி அனுப்பியதில் சீனாவின் நீர்மூழ்கி கப்பலின் பங்கு முக்கியம். அப்படிப்பட்ட ஒரு சீன நீர்மூழ்கி கப்பல் தற்போது காணாமல் போய் உள்ளது. அந்த நீர் மூழ்கி கப்பல் காணாமல் போய் பல வாரங்கள் ஆகிறது, ஆனால் அதைப்பற்றி, அதில் இருந்தவர்களை பற்றி சீனா எந்த அறிக்கையும் கொடுக்க வில்லை. அந்த கப்பலில் இருந்து Crews என்ன ஆனார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது, அவர்கள் பெற்றோருக்கும் தெரியாது!
பொதுவாக நீர்மூழ்கி கப்பல்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. அது அவ்வப்போது எரிபொருள் மற்றும் உணவு போன்ற தேவைகளை நிரப்ப வெளியே வரும் போது தான் அதை கண்டுபிடிக்க முடியும். அதனோடு தொடர்பு கொள்ள வேண்டுமெனில் கூட அது நீரின் மேற்பரப்புக்கு வந்து, அது தெரிந்து தொடர்பு கொண்டால் தான் உண்டு.
அதிலும் அணுமின் நீர்மூழ்கி கப்பல்கள், அணுவிசையில் இயங்குவதால், எரிபொருள் நிரப்ப தேவையில்லை. எனவே பல மாதங்களுக்கு நீருக்கு அடியில் வெளி வராமல் இயங்க முடியும் வல்லமை பெற்றவை.
இந்தியா- பாகிஸ்தான் போரில் நாம் பங்களாதேஷ் நாட்டை விடுவிக்க போராடிய போது, இந்தியாவின் கப்பற்படை பெரும்பங்காற்றியது. ஆம் பாகிஸ்தான் நிலவழியிலும், ஆகாய மார்க்கமாகவும் கிழக்கு பாகிதானை அடைய முடியாத போனது. அங்கே இருக்கும் ராணுவ வீரர்களை கப்பாற்ற பாகிஸ்தான் கடல் வழியாக தனது கப்பற்படையினை அனுப்பியது. ஆனால் இந்திய கப்பற்படை அவற்றை துவம்சம் செய்து விட்டது. அப்போது அவர்களுக்கு, மருந்து, மருத்துவம் மற்றும் உணவு கூட கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இப்படி சிக்கிக் கொண்டு பாக்கிஸ்தான் அலறிய போது, திடீரென பாக்கிஸ்தான் அமெரிக்கா,மற்றும் இங்கிலாந்தின் உதவியை கோரியது.
அதனால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் இரு பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களை வங்காள விரிகுடாவிலும், அரபிக்கடலிலும் இந்தியாவை தாக்க வந்தது. அதை எதிர்கொள்ளும் வலிமையான நிலையில் இந்தியா இல்லை. இந்தியா பெரிய தோல்வியை சந்தித்திருக்கும். அதற்கு பின்னர் இந்தியாவை மேலும் உடைத்திருப்பார் கள்.
அந்த சூழலிலும் இந்தியா அதை எதிர்க்க துணிந்தது, ஆனால் யாருக்கும் தெரியாமல் இந்தியாவின் உற்ற நண்பன் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்கள் அமெரிக்கா, இங்கிலாந்தின் மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பல்களை சுற்றி வளைத்து இனியும் இங்கிருந்தால் கப்பல் சுக்கு நூறாகி விடும் என்று எச்சரித்தது. இதனை எதிர்பார்க்காத அமெரிக்காவும், இங்கிலாந்தும் துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிவிட்டன. இந்த இரு நாடுகளையும் விரட்டி அடிக்க முக்கிய காரணம் ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பல்கள் தான் என்பதை நினைவு கூர்ந்தால் நீர்மூழ்கி எவ்வளவு வலிமை வாய்ந்தது என்று புரியும்.
அப்படியென்றால் எதற்காக பெரிய, பெரிய கப்பலை அமெரிக்காவும், சீனாவும் கட்டுகிறது. இந்தியாவும் பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டியுள்ளதே. நாம் அதை கட்ட 20 வருடங்கள் ஆனது, அடுத்த கப்பலை 6 வருடங்களில் கட்டித்தருகிறோம் என்று நம் நிறுவனங்கள் உறுதி சொல்லும் போது, இந்தியா அதை உடனே தொடங்காமல், முடிவை ஏன் ஒத்திவைத்து வருகிறது?
இன்று நம்மிடம் இருக்கும் ஆரம்ப காலத்தில் தயாரித்த BraMos ஏவுகணையை வைத்தே நம்மால், அமெரிக்காவின் மிக நவீனமான போர்க்கப்பலை தாக்கி அழிக்க முடியும். அதை சமீபத்தில் ரஷ்யா உக்ரைனில் பயன்படுத்திய போது பிரம்மோஸின் வலிமையை உலகம் அறிந்து கொண்டது. அதை முன்பே அறிந்திருந்த ரஷ்யா, அதனால் தான் பெரிய போர்க்கப்பல்களை கட்டவில்லை.
அதற்கு பதிலாக, விமானந்தாங்கி கப்பல்களை தாக்கக்கூடிய வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல்களை கட்டியது. நம் நீர்மூழ்கி கப்பல்கள் பிரம்மோஸை ஏவும் வல்லமை படைத்தது என்றால் அது எவ்வளவு பவர்ஃபுல்லானது என்பதை மேற்சொன்ன சரித்திர நிகழ்வில் தெரிந்து கொள்ளலாம்.
அதன் பின்னர் நமக்கு நீர்மூழ்கி கப்பலின் தேவையும், போர்கப்பலின் தேவையையும் புரிந்தது. அதனால் நாம் இரண்டாவது விக்ரமாதித்தனை கட்டுமுன், பிரான்ஸிடம் இருந்து 6 நீர் மூழ்கி கப்பலை ஆர்டர் செய்துள்ளோம். நாமும் சொந்தமாக அணுமின் நீர்முழ்கி கப்பலையும் கட்டி வருகிறோம்.
ஏனென்றால் அதில் இரண்டு முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும். நாம் மற்றவர்களை தாக்கி ஆள நினைக்கிறோமா, அல்லது நம்மை பாதுகாத்துக்கொள்ள நினைகிறோமா என்பது முக்கியம்.
அமெரிக்கா தனது வல்லரசு ஆதிக்கம் மூலம் உலகை ஆள நினைத்தது. அதனால் தைவான், அரேபிய நாடுகள் போன்ற இடத்தில் தான் இருக்கிறோம் என்ற பவரை காட்டவும், ஒரு படைபலத்தை காட்டவும் இந்த விமானந்தாங்கி கப்பல்கள் அவசியம். அங்கே அது எதிர்த்த நாடுகள் எல்லாம் சிறியது என்பதால், அங்கே வான் மூலம் தாக்கிவிடுவோம் என்று பயமுறுத்த போர் விமானங்கள் தேவை என்பது அதில் முக்கியமானது. அதற்கு விமானந்தாக்கி கப்பல்கள் அவசியம்.
அப்போது அருகில் ஏதாவது ஒரு தீவு அல்லது நாடு நமக்கு உதவினால் போதுமல்லவா? ஆனால் நமது எதிரிகள் ஒரே இடத்தில் இருந்து கொண்டு தாக்க மாட்டார்களே! அவர்கள் நம் பாதுகாப்பற்ற பகுதிகளைத்தானே தேர்தந்தெடுப்பார்கள். அதாவது இடம் மாறிக்கொண்டு இருக்கும்போது எல்லா இடங்களிலும் நமக்கு தீவுகள் கிடைக்குமா? அதனால்தான் நகரும் தீவாக விமானம் தாங்கி கப்பல்களும் நமக்கு அவசியம்.
ஆனால் அதே அந்த விமானந்தாங்கி போர்க் கப்பல்கள், அது தன்னையே காத்துக் கொள்ள சில உதவி போர்க் கப்பல்களையும், நீர் மூழ்கி கப்பல்களையும் எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டியது அவசியம். அதனால் அதன் பராமரிப்பு செலவுகள் மிக மிக அதிகம்.
இன்று அமெரிக்காவை விட சீனாவின் கப்பல்படையின் எண்ணிக்கை பெரியது. ஆனால் அதன் தரமும், உண்மையான திறமையும், போர் அனுபவமும் இல்லாத போது, அதை இன்னும் யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. அதே சமயம், சீனாவிற்கு அமெரிக்கா போல உலக நாடுகளை ஆள வேண்டும் என்ற பேராசை உள்ளது. இதனால் சீனா தனது போர்க்கப்பல்களில் மிகப்பெரிய முதலீடு செய்தது.
ஆனால் இந்தியா வேறு எந்த நாட்டையும் ஆளவும், அடித்து பிடுங்கவும் நினைக்கவில்லை. தன்னை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புகிறது எனும் போது, நமக்கு உடனே பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் தேவையில்லை.
ஆனால் வருங்காலத்தில் இந்தியாவின் வர்த்தகம் உலகெங்கும் விஸ்தரிக்கும்போது, நமது வர்த்தக கப்பல்கள் இதே தைவான் சந்திப்பில் செல்ல வேண்டி இருக்கலாம். ஆம், ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகரில் நாம் பெரிய முதலீடு செய்கிறோம். நாளை Crude Oil அங்கிருந்து வரவேண்டிய சூழல் ஏற்பட்டால், நமது வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வேண்டுமல்லவா?
அப்போது அங்கே நமது வர்த்தக கப்பல்கள் செல்லும் போது, நம்முடைய ஒரு விமானந்தாங்கி கப்பல். பிரச்சினைக்குரிய இடத்தில் இருப்பது அவசியம். எனவே அது தேவையானது.
மேலும் அதுபோன்ற பெரிய கப்பல்களை கட்டும்போது புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டி இருக்கும். அந்த அனுபவங்கள் சரக்கு போக்குவரத்து கப்பல்களை கட்ட வெகுவாக உதவும் என்பதால் அதையும் செய்ய வேண்டும். ஆம், சீனா பெரிய, பெரிய போர்கப்பல்களை கட்டிய அனுபவத்தை வைத்து தான், இன்று உலகின் 80% எண்ணெய் கப்பல்களை கட்டுகிறது.
மேலும் அடுத்த உலகப்போருக்கான சாத்தியம் தைவான் மூலம் வரலாம் என்ற சூழலில், சீனாவின் காணாமல் போன இந்த முக்கியமான நீர்மூழ்கி கப்பலை பற்றி பல கோணங்களில் பார்க்கிறார்கள். அது பழுது அல்லது விபத்தால் காணாமல் போனதா, அல்லது காலி செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
அதில் எது நடந்திருந்தாலும் சீனாவிற்கு அசிங்கமே என்ற சூழலில், திருடனுக்கு தேள் கொட்டியது போல. சீனா அமுக்கி வாசிக்கிறது. அது ஏற்கனவே பொருளாதார நெரிசலிலும், உள்நாட்டு வங்கிகள் திவால் ஆகி, மக்களின் கோடிக்கணக்கான நிதிகள் வங்கியில் முடங்கிவிட்ட நிலையில், இது மேலும் ஒரு சிக்கலை கொடுத்துள்ளது..
அதன் விளைவாக பல அயல்நாட்டு நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறுகிறது. அதன் மறுபக்கம் இந்தியா, சந்திராயன் என்று ஒரு புதிய சாதனையும் செய்துள்ளது. இந்தியா சாதனை மேல் சாதனை செய்ய, சீனாவிற்கோ சோதனை மேல் சோதனை!
இன்று உலகின் பல கப்பல் தேவைகளை சீனா பூர்த்தி செய்யும் நிலையில், அது வீழும்போது, அந்த வர்த்தகத்தை நாம் எடுத்து செய்ய வேண்டுமெனில், அதற்காக கப்பல் கட்டும் டெக்னாலஜி அதிகம் கற்க, நமக்கு பெரிய விமானந்தாங்கி கப்பல்கள் கட்டிய அனுபவம் தேவைப்படும்..
பொதுவாக சீனாவின் தரம் என்பது கேள்விக்குரியது மட்டுமல்ல, சந்த்தேகத்திற்குரியது. அதன் ராணுவ பலம் உலகின் மிகப்பெரியது. ஆனால் அதன் திறன் என்பது கேலிக்கூத்தானது. அதனால் தான் வெறும் 60 இந்திய ராணுவத்தினர், 320 சீன ராணுவதினரை அடித்து துவம்சம் செய்தார்கள்.
அளவுக்கு அதிகமாக ஆடிய சீனாவிற்கு அடிமேல் அடி விழும் நேரத்தில், இப்போது இந்தியா திபெத், ஜிங்யாங் தனி நாடுகள் என்ற ஒரு நிலைப்பாட்டை நோக்கி செல்வது அதற்கு மேலும் புதிய சிக்கல்களை ஏற்படுத்தும்.
இப்படி சீனா ஒரு பக்கம் வீழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தியா வளர்வது அவர்களுக்கு ராணுவ ரீதியில் மட்டுமல்ல, அதைவிட பொருளாதார ரீதியில் மிகவும் ஆபத்தானது. அடுத்த 50 ஆண்டுகள் இந்தியாவுடையது. அது நமக்கு மட்டுமானதல்ல, உலகின் நீதி, நேர்மைக்கானது. அது நடக்க வேண்டுமெனில் மோடி மீண்டும் வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu