திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை உடனடியாக மீட்ட போலீசார்

திருவிழா கூட்டத்தில்  காணாமல் போன குழந்தையை  உடனடியாக மீட்ட போலீசார்
X

திருவிழாவில் காணாமல் போன குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையை உடனடியாக மீட்ட போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் சேடபட்டி கன்னியம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெயராமன்- கோகிலா தம்பதியினர் சின்னகட்டளை கிராமத்தில் நடந்து வரும் சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் விழாவிற்கு குடும்பத்துடன் சென்றனர். அங்கு இவர்களது பெண் குழந்தை கீர்த்திகா (வயது5 )கூட்டத்தில் காணாமல் போய் விட்டது.

பெற்றோர் ஒரு புறம் தேடி அலைந்தனர். குழந்தை பெற்றோரை காணாமல் தவித்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரர் ராஜ்குமார் குழந்தை கீர்த்திகாவை அழைத்துச் சென்று எஸ்.ஐ., வேல்முருகன், முதல்நிலை காவலர் சிவாவிடம் ஒப்படைத்தார். அவர்கள் குழந்தையின் அடையாளங்களை கூறி மைக்கில் அறிவிப்பு செய்தனர்.

இந்த அறிவிப்பை கேட்ட ஜெயராமன்- கோகிலா தம்பதியினர் அறிவிப்பு வெளியான போலீஸ் பீட்டிற்கு (பாதுகாப்பு போலீசார் முகாமிட்டுள்ள இடம்) வந்து தங்கள் குழந்தையை பெற்றுக் கொண்டனர். கண்ணீர் மல்க போலீசாருக்கும், ஊர்க்காவல்படை வீரருக்கும், சொர்ணமுத்துமாரியம்மனுக்கும் நன்றி கூறிய பின்னர் குழந்தையை தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!