தேனி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு

தேனி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்: அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு
X
கம்பத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி முகாம்களை, அமைச்சர் மா. சுப்ரமணியன் ஆய்வு செய்தார். இன்று, 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தேனி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில், 50 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இப்பணிகளை அமைச்சர் சுப்பிரமணியன், கலெக்டர் முரளீதரன், எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அவ்வகையில், தேவதானப்பட்டி, பழனிசெட்டிபட்டி, கம்பம், குமுளி உட்பட பல்வேறு கொரோனா தடுப்பூசி மையங்களை ஆய்வு செய்யப்பட்டது.

குமுளியில் கேரள எல்லையில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா மற்றும் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளையும், அமைச்சர் ஆய்வு செய்தார். தேனி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 10 லட்சத்து 44 ஆயிரத்து 558 பேர் உள்ளனர். இவர்களில் 5 லட்சத்து 72 ஆயிரத்து 302 பேர் (54.80 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 2 லட்சத்து 5 ஆயிரத்து 549 பேர் (19.70 சதவீதம்) இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர். இன்றைய முகாமில், ஒரே நாளில் 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture