முல்லை பெரியாறு அணையை பார்வையிட அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை

முல்லை பெரியாறு அணையை பார்வையிட   அமைச்சர் துரைமுருகன் நாளை வருகை
X

முல்லை பெரியாறு அணை

தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார்

முல்லை பெரியாறு அணையில் கேரள அரசு தன்னிச்சையாக தண்ணீர் திறந்து விட்டு பெரும் பிரச்னையை உருவாக்கிய நிலையில், தமிழக விவசாயிகள் அடுத்தடுத்து போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் துரைமுருகன் அணையை பார்வையிட நாளை வருகிறார். மதியம் 12.45 மணி முதல் 1.30 மணி வரை அவர் அணையினை முழுமையாக பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். தேனி கலெக்டர் முரளீதரன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருகின்றனர்.

அமைச்சர் நாளை அணையை ஆய்வு செய்த பின்னர், கூறும் உறுதிமொழிகளை பொறுத்து போராட்டங்கள் திசைமாறும். ஆனால் அரசியல் கட்சிகளை எளிதில் நம்ப மாட்டோம். எங்களை மட்டுமே நம்புவோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!