உள்துறை இணையமைச்சர் அண்ணாமலை..?! பா.ஜ.க., தலைவர் பொன்.மாணிக்கவேல்..?!

உள்துறை இணையமைச்சர் அண்ணாமலை..?!  பா.ஜ.க., தலைவர் பொன்.மாணிக்கவேல்..?!
X

மோடியுடன் அண்ணாமலை (கோப்பு படம்)

அண்ணாமலை மத்திய உள்துறை இணையமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். தமிழக பா.ஜ.க., தலைவராக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட உள்ளார்.

மிக, மிக முக்கியத்துவம் வாய்ந்த நம்பகமான குழுக்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் சிறிய அளவிலான சரிவு இருந்தாலும், மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பா.ஜ.க., நாளை ஜூன் 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணிக்கு ஆட்சியமைக்கிறது. இதற்கான அமைச்சரவை பட்டியல் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் இப்படி ஒரு தகவல் தமிழக சமூக ஊடகங்களில்பரவி வருகிறது.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இவ்வளவு டென்சனுக்கு மத்தியிலும் பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் கூட்டணி விஷயத்தில் அண்ணாமலை செய்தது சரியே. அதுவும் அவர் அமைத்த என்.டி.ஏ., கூட்டணி தமிழகத்தில் 18 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுக்களை பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பா.ஜ.க.,வுக்கு மிகவும் பிரகாசமான எதிர்காலம் உண்டு என குறிப்பிட்டு பேசியுள்ளார்.


இந்த விஷயத்தை அத்தனை பேரும் கூர்மையாக கவனித்துள்ளனர். அண்ணாமலை மத்திய ஆட்சியாளர்கள் இடையே கவனிக்கப்படும் ஒரு நபராக வளர்ந்துள்ளார். அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக அவரை உள்துறை இணையமைச்சராக பொறுப்பேற்க வைத்து, நாட்டின் சட்டம்- ஒழுங்கு நிலைமை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களை கட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அந்த இடத்தை நிரப்ப தமிழகத்தில் சரியான ஆள் ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல். மிக, மிக நியாயமும், நேர்மையும், பக்தியும், ஒழுக்கமும், பேரறிவும், துல்லியமான செயல்பாடும் நிறைந்த ஒரு நபர். இவரை தமிழக பா.ஜ.க., தலைவராக நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆக அண்ணாமலை ஐ.பி.எஸ்., பொன்.மாணிக்கவேல் ஐ.பி.எஸ்., தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஐ.பி.எஸ்., என மூன்று ஐ.பி.எஸ்.,கள் பா.ஜ.க., சார்பில் தமிழகத்தில் களம் இறக்கி விடப்பட்டுள்ளனர். இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய்தோவலும் ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி தான். இவரும் தமிழகத்தில் முகாமிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தவிர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியன் பொலிட்டிக்கல் சயின்ஸ்பாடத்தில் பிஹைச்டி பட்டம் பெற்றவர். அதேபோல் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் பாடத்திலும் டாக்டர் பட்டம் பெற்றவர்.

மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமனும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் படிப்பறிவு பெற்றவர். ஏற்கனவே டாக்டர் பட்டம் பெற்ற தமிழிசை சவுந்திரராஜன் தமிழகத்தில் இருக்கிறார். இப்படி உயர்கல்வி பெற்ற தமிழர்களை வைத்து பா.ஜ.க., தமிழகத்தை சுற்றி வளைக்கிறது. ஆக இப்படி வளைப்பதன் நோக்கம் வரும் சட்டபை தேர்தலில் எப்படியாவது பெரும் எம்.எல்.ஏ.,க்களை அள்ளி விட வேண்டும் என்பதாகும் என பா.ஜ.க.,வினர் திட்டமிட்டுள்ளனர். பொன்.மாணிக்கவேல் வரவு மிகப்பெரிய அளவில் பா.ஜ.க.,வினராலும், தமிழக மக்களால் கொண்டாடப்படுவார்கள் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!