செருப்பு தைக்கும் தொழிலாளி வீட்டு திருமண விழாவில் எம்.ஜி.ஆர்

பைல் படம்
தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சரா கவும் இருந்தவர்.எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடி களின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.
1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் உங்கள் பார்வைக்கு.... ராமாவரம் தோட்டத்திலிருந்து தனது காரில் கோட்டைக்கு போய் கொண்டே படிக்கிறார். அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ அல்லது தான் யார் என்ன விவரம் என்று இணைப்பு கடிதம் கூட இல்லாமல் வந்த திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. உதவி கேட்க வில்லை கலந்து கொள்ள கோரிக்கை இல்லை.
மனதில் ஏதோ தோன்றிய எம்ஜிஆர் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிகை அனுப்பியது யார் அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரம் சேகரிக்க சொல்கிறார். பத்திரிகையில் இருந்த முகவரி கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் திரையரங்கம் அருகில் சென்று பார்க்கும் போது அந்த அரங்கத்தின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிகிறது.
அவர் செருப்பு தைக்கும் உபகரணங்களுடன் சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல நம் இதய தெய்வம் படம் மட்டும் ஒட்டப்பட்டு இருந்தது. விவரங்களை கேட்ட பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும். ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மை தொண்டனை நினைத்து உருகுகிறார்.
திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் காவல் துறை அணிவகுப்பு அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் காரணம் தெரியாமல் விழிக்கும் திருமண வீட்டார். மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் எம்ஜிஆர். 4777 வாகனம் அந்த எளியவன் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை. கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு நீ மட்டும் தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் எட்டாவது அதிசயம் எம்ஜியார்.
செருப்பு தைய்க்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழவில்லை நடப்பிலும் வாழ்ந்தார் எம்ஜிஆர் . இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu