'கரண்ட் பில் கட்டுங்க' : மின்வாரியம் மெசேஜ்..!

கரண்ட் பில் கட்டுங்க : மின்வாரியம் மெசேஜ்..!
X

கோப்பு படம்.

மின் கட்டண உயா்வு வித்தியாச தொகையை செலுத்துமாறு நுகா்வோருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் அனுப்பி வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 1-ஆம் தேதி மின் கட்டணம் உயா்த்தப்பட்டது. எனினும், ஜூலை 1-ஆம் தேதிக்கு வீட்டு-அடுக்குமாடி குடியிருப்புகளின் இணைப்புகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பொது இணைப்புகளுக்கு மின் கட்டணம் முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததால், மின் கட்டண உயா்வின் அடிப்படையில் தொகை வசூலிக்கப்படவில்லை.

இதையடுத்து மின் கட்டண உயா்வு அமலான ஜூலை 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிட்ட நாள்களுக்கு உரிய கட்டண உயா்வு வித்தியாசத் தொகை குறித்து குறுந்தகவல் சேவையை (எஸ்எம்எஸ்) மின் நுகா்வோரின் கைப்பேசிக்கு தற்போது மின்சார வாரியம் அனுப்பி வருகிறது. மின் நுகா்வோர் உரிமையாளரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்குத்தான் தகவல் செல்லும் என்பதால், வாடகைக்கு குடியிருப்போருக்கு இது குறித்துத் தெரிய வாய்ப்பில்லை.

எடுத்துக்காட்டாக, ரூ.12 அல்லது ரூ.17 அல்லது ரூ.23 அல்லது ரூ.38 என மிகச் சிறிய தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் செலுத்துமாறு கூறி, அதை நுகா்வோர் மின் இணைப்பு எண்ணுக்குரிய இணையதளத்திலும் மின் வாரியம் பதிவிட்டுள்ளது.

Tags

Next Story