போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

போடி அரசு மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு
X
போடி அரசு மருத்துவமனையில் முக்கியமான பல மருந்து, மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு டாக்டர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை கூட, அரசு மருத்துவமனை பார்மஸியில் இல்லை என திரும்ப அனுப்பி விடுகின்றனர்.

குறிப்பாக ரத்தஅழுத்தம், சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தும் மாத்திரைகளுக்கு பெருமளவில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக, நோயாளிகள் புகார் எழுப்பி உள்ளனர். அரசு டாக்டர்கள் எழுதி தரும் மருந்து சீட்டுக்கு வெளியில் உள்ள தனியார் மருந்துக்கடையில் மருந்துகள் வாங்க வேண்டிய நிலை உள்ளது என அவர்கள் புகார் எழுப்பி உள்ளனர். இது குறித்து, சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!