பிளேக், காலராவையே கடந்துட்டோம். கொரோனா என்ன ஜுஜுபி: 100 வயது மூதாட்டி நம்பிக்கை

பிளேக், காலராவையே கடந்துட்டோம்.   கொரோனா என்ன ஜுஜுபி: 100 வயது மூதாட்டி நம்பிக்கை
X

நம்பிக்கையூட்டும் மூதாட்டி மெர்சி வில்லியம்ஸ்

பிளேக், காலராவை ஒப்பிடும் போது, கொரோனாவை மருத்துவ உலகம் எளிதாக சமாளித்து விடும் என நுாறு வயது மூதாட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் பிளேக், காலரா பேரிடர்களை பார்த்த 100 வயது மூதாட்டி, தற்போது உருவாகி உள்ள கொரோனா பேரிடர் எளிதில் கடந்து செல்லக்கூடிய விஷயம் தான் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தை சேர்ந்த 100 வயது மூதாட்டி மெர்ஸி வில்லியம்ஸ். இவருக்கு கட ந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. தவிர பல்வேறு உடல் பிரச்னைகளும் இருந்தன. அத்தனையும் எளிதில் கடந்து தற்போதும் சுறுசுறுப்புடன், மிகுந்த நினைவாற்றல், புத்திக்கூர்மையுடன் செயல்படும் மெர்ஸி வில்லியம்ஸ் இப்போது நுாற்றாண்டு விழா கொண்டாடி வருகிறார்.

கொரோனா பேரிடர் போல் வேறு ஏதாவது பேரிடர்களை உங்கள் வாழ்க்கையில் பார்த்துள்ளீர்களா? என மூதாட்டி மெர்ஸி வில்லியம்ஸ் இடம் கேட்டோம். அவர் பேசியதாவது: நான் கடந்த 1922ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி பிறந்தேன். எனக்கு 99 வயது நிறைவு பெற்று நுாறாவது வயது நடைபெற்று வருகிறது. எனக்கு தற்போது ஆறு குழந்தைகள், 13 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுபேரன், பேத்திகள் உள்ளனர். என் வாழ்நாளில் நான்காவது தலைமுறையை பார்த்து விட்டேன். அதேபோல் கொரோனா பேரிடர் போன்ற மிகப்பெரிய பேரிடர்களை சந்தித்து கடந்து விட்டேன். என் தந்தை ஜான் ஆபிரகாம் போடியின் முதல் பட்டதாரி.

அவர் என்னை தமிழ் படிக்க வைக்க விரும்பினார். அப்போது தமிழ் பள்ளிகளும் இல்லை. பாடப்புத்தகங்களும் இல்லை. எனவே ஆங்கிலம் பயின்று நானும் பட்டம் பெற்றேன். என் குடும்பத்தில் அத்தனை பேருமே பட்டதாரிகள் தான். பிரெஞ்ச் நாட்டில் இருந்து தமிழில் பைபில் அச்சிட்டு வெளியிட்டனர். அந்த பைபிளை என்னிடம் கொடுத்து என் தந்தை தமிழ் படிக்க சொன்னார். ஒரு பைபிளை படித்து முடிக்க எனக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இது போன்று சிரமப்பட்டே தமிழ் மொழியினை படித்தேன்.

எனக்கு 9 வயது இருக்கும் போது காந்தி போடிக்கு வந்திருந்தார். அவரது ஆங்கில பேச்சை எனது தந்தை தான் மொழி பெயர்த்து மக்களுக்கு விளக்கினார். அவரை பார்த்தே நான் எனது மொழிப்புலமையினை அதிகரித்துக் கொண்டேன். என் கணவர் வில்லியம்ஸ் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். 1987ம் ஆண்டு இறந்து விட்டார். தற்போது கொரோனா பேரிடர் இருந்து வருகிறது. நமது மருத்துவத்துறை தடுப்பு மருந்து கண்டறிந்து மிகவும் எளிதாக கடந்து விட்டது. என் குடும்பத்தில் மட்டும் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுடனே நானும் இருந்தேன். எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. பாதித்த அனைவரையும் நானே பராமரித்து மீட்டு கொண்டு வந்து விட்டேன்.

எனது இளமை காலத்தில் திருமணத்திற்கு முன்னரே பிளேக் நோய் ஏற்பட்டு பலநுாறு பேர். இறந்தனர். ஒவ்வொரு ஊரிலும் பல நுாறு பேர் இறந்தனர். அப்போது பாதிப்பினை கணக்கிடவே முடியவில்லை. அடுத்து 1950ல் காலரா பேரிடர் வந்த போது என் இரண்டு குழந்தைகளை நானே இழந்து விட்டேன். மொத்தம் எனக்கு 9 குழந்தைகள். அதில் இரண்டு காலராவிற்கு இறந்து விட்டது. ஒரு குழந்தை வேறு ஒரு பாதிப்பில் இறந்து விட்டது. தற்போது ஆறு பேர் உள்ளனர். பிளேக், காலராவினை வெற்றி பெற்ற மருத்துவத்துறை தற்போது பல மடங்கு முன்னேறி உள்ளது. எனவே கொரோனா பேரிடரை மிக எளிதாக கடந்து விடுவார்கள்.

ஆரோக்கியமாக வாழ மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பெரிய விஷயம் இல்லை. உணவுக்கட்டுப்பாடும், உ டற்பயிற்சியும் மிகவும் முக்கியம். அவற்றை நான் முறையாக கடைபிடித்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறேன் என்றார்.

Tags

Next Story
ai solutions for small business