மேகமலையிலேயே இருக்கட்டும் அரிசிக் கொம்பன் யானை

மேகமலையிலேயே இருக்கட்டும் அரிசிக் கொம்பன் யானை

அரிசிக் கொம்பன் யானையை பிடித்த கேரள வனத்துறை குழுவினர். (பைல் படம்)

மேகமலையில் அரிசிக்கொம்பன் யானை உலாவினால் வனக்குற்றங்கள் குறையும், வனவளம் பெருகும்

கேரளாவில் இடுக்கி மாவட்ட வனப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோரை மிதித்தும், துாக்கி வீசி எறிந்தும் கொலை செய்த அரிசிக் கொம்பன் யானையை கேரள வனத்துறை பிடித்து கொண்டு வந்து பெரியாறு புலிகள் சரணாலயத்திற்குள் விட்டனர். இந்த சரணாலயத்தின் தொடர்ச்சியாக மேகமலை வனப்பகுதி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதிக்கும், பெரியாறு புலிகள் சரணாலயத்திற்கும் இடையே அதாவது அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்கும் வனவிலங்குகள் இடம் பெயர்வது வழக்கமாக நடைபெறும் விஷயம்.

இந்நிலையில், அரிசிக் கொம்பன் யானை மேகமலைக்குள் இடம் பெயர்ந்து விட்டது என கேரள பத்திரிக்கைகள் தான் முதலில் சர்ச்சையை கிளப்பினர். அதே நேரத்தில் மேகமலையில் ஒரு குடியிருப்பினை யானை சேதப்படுத்தியது. உண்மையில் அந்த குடியிருப்பினை சேதப்படுத்தியது அரிசிக் கொம்பன் யானையா? அல்லது வேறு யானையா? என்று உறுதிப்படுத்தப்படவில்லை. இதனை கேரள வனத்துறையோ, தமிழக வனத்துறையோ உறுதிப்படுத்தாத நிலையில், அரிசிக் கொம்பன் யானை மேகமலைக்குள் வந்து விட்டது என்ற வதந்தி வலுவடைந்து விட்டது. இந்த வதந்தியை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக வனத்துறை, மேகமலைக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் என தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

உண்மையில் அரிசிக் கொம்பன் யானை மேகமலையில் இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை. இருந்தாலும் அரிசிக் கொம்பன் மேகமலையில் இருக்கட்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் விரும்புகின்றனர். காரணம் மேகமலையில் தற்போது நடக்கும் வனக்குற்றங்களை பட்டியலிடவே முடியாது. அந்த அளவு வரம்பு மீறி வனக்குற்றங்கள் நடக்கின்றன. வனச்சொத்துக்கள் முறைகேடாக சூறையாடப்படுகின்றன. வனத்துறையால் இதனை தடுக்க முடியவில்லை. அரிசிக்கொம்பன் யானையாவது இந்த வனக்குற்றங்களை தடுக்கட்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story