மாஸ்டர், விசா, ரூபே: டிஜிட்டல் பரிவர்த்தனையில் உங்களுக்கு எது தேவை?

மாஸ்டர், விசா, ரூபே: டிஜிட்டல் பரிவர்த்தனையில் உங்களுக்கு   எது தேவை?
வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் அடிப்படையில், கடன் அட்டை சேவை நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் பரிவர்த்தனை துறையில், வாடிக்கையாளர்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதுடன், போட்டியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை கடந்த மார்ச்சில் வெளியிட்டு இருந்தது. இதன்படி, தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள், தங்களது விருப்பத்தின் அடிப்படையில், 'மாஸ்டர், ரூபே, விசா' என எந்தவொரு நிறுவனத்தின் கடன் அட்டையையும், விண்ணப்பிக்கும் போதே தேர்வு செய்து, பெற்றுக் கொள்ளலாம்.

புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிப்போர் மட்டுமின்றி, ஏற்கனவே கடன் அட்டை வைத்திருப்போரும், அட்டையை புதுப்பிக்கும் போது, விரும்பினால் வேறு நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

கடன் அட்டை நிறுவனங்களின் சேவை, கட்டணங்கள் அடிப்படையில், வாடிக்கையாளர் விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்ய இது வாய்ப்பளிக்கும். முன்னதாக, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிறுவனங்கள், கடன் அட்டை வினியோகிக்கும் போது, வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்காமல், தாங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள நிறுவனத்தின் கடன் அட்டைகளை மட்டுமே வினியோகித்து வந்தன.

இந்த ஒப்பந்தங்களுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. மேலும், 10 லட்சத்திற்கும் குறைவான கடன் அட்டைகளை வினியோகித்துள்ள நிறுவனங்களுக்கு மட்டும், புதிய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடன் அட்டை வைத்திருப்போர், அட்டையை புதுப்பிக்கும்போது, விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

Tags

Next Story