முகக்கவசத்திற்கு மீண்டும் மவுசு: கிடுகிடுவென விலை உயர்வு
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது முகக்கவசத்தின் விலை கிடுகிடுவெ உயர்ந்திருந்தது. இரண்டாம் அலையின் பரவல் வேகம் குறையும் வரை முகக் கவசங்களின் விலை குறையவில்லை. முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது, 1.50 ரூபாய் மதிப்பிலான முகக் கவசம் 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இரண்டாம் அலை ஓய்ந்த பின்னர் முககவசத்தின் தேவை குறைந்தது. இதனால் 1.50 ரூபாய் விலை உள்ள முக கவசம் அதே விலைக்கு விற்கப்பட்டது. சில்லரை கடைகளில் மட்டும் 3 ரூபாய், 4 ரூபாய் என சூழலுக்கு ஏற்ப விற்பனையானது.
தற்போது மூன்றாவது அலை தொடங்கிய நிலையில், முககவசத்தின் விலை அதிகரித்துள்ளது. மொத்த கடைகளிலேயே இதன் விலை, இரண்டு முதல் மூன்று மடங்கு விலை உயர்ந்துள்ளது. சில்லரை மார்க்கெட்டில் மீண்டும் ஒரு முககவசம் 10 ரூபாய் என அதிகரித்து விட்டது. மருந்துக்கடைகள், மொத்த வியாபாரிகளின் இந்த விலை கொள்ளையை கட்டுப்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu