தேனியில் இன்று முதல் மாஸ்க் அபராதம் ரூ.500 வசூலிப்பு

தேனியில் இன்று முதல் மாஸ்க் அபராதம் ரூ.500 வசூலிப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தி்ல் மாஸ்க் இல்லாமல் பொதுவெளியில் வருபவர்களுக்கு இன்று முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவில் தேனி மாவட்டத்தி்ல் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. கொரேனா விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும், மக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவற்றினை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் அணிவதை பலரும் பின்பற்றவில்லை. இதனால் கொரோனா தொற்று மீண்டும் பரவும் வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்க மாஸ்க் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இன்று முதல் தேனி மாவட்டத்தில் 500 ரூபாய் அபராதம் விதிக்க போலீசார், வருவாய்த்துறை, உள்ளாட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மக்கள் மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!