தேனியில் 7 ஜோடிகளுக்கு திருமணம்..! சீர்வரிசை வழங்கி வாழ்த்து..!

தேனியில் 7 ஜோடிகளுக்கு திருமணம்..! சீர்வரிசை வழங்கி வாழ்த்து..!

தேனி மாவட்ட ஆட்சித்தலைர் வீரபாண்டி அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலில் 7 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து, சீர்வரிசைகள் வழங்கினார் 

தமிழக முதல்வர் அறிவித்த திட்டத்தின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேனியில் 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி சீர்வரிசை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் தேனி மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சியில் உள்ள அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயிலில் மாவட்ட ஆட்சித்தலைர் ஆர்.வி.ஷஜீவனா 7 ஜோடிகளுக்கு திருமணங்களை நடத்தி வைத்து சீர்வரிசைகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் இணைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 4 கிராம் மாங்கல்யம் உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்திட உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், இன்று 7 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்திற்கு தேவையான 4 கிராம் திருமாங்கல்யம் ரூ.30,000/- மணமகன் ஆடை ரூ.1,000/- மணமகள் ஆடை ரூ.2,000/- திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரு.2,000/- மாலை, புஷ்பம் ரூ.1,000/- பீரோ ரூ.7,800/- கட்டில் ரூ.7,500/- மெத்தை ரூ.2,200/- இரண்டு தலையணை ரூ.190/- ஒரு பாய் ரூ.180/- இரண்டு கைக்கடிகாரம் ரூ.1,000/- ஒரு மிக்சி ரூ.1,490/- பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3,640/- என மொத்தம் ரூ.60,000/- மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமண ஜோடிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா, துணை தலைவர் சாந்தகுமார், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கலைவாணன், கௌமாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் மாரிமுத்து, குச்சனூர் திருக்கோயில் செயல் அலுவலர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story