உலகின் விநோதச் சட்டங்கள்..!
பைல் படம்
உலக நாடுகள் பலவற்றில் விநோதமான வேடிக்கையான சட்டங்கள் உள்ளன. அவற்றில் சிவற்றைப் பார்ப்போம்
நடனம் ஆட லைசென்ஸ்: ஸ்வீடனில் உணவகத்தில் நடனம் ஆட அனுமதியில்லை. அதற்குத் தனியாக டான்ஸ் லைசென்ஸ் பெற வேண்டும். இது 2016-ஆம் ஆண்டிலேயே காலாவதியாகி விட்டாலும், 2020-இல் ஓர் உணவகத்தில் ஷர்ஜிடென் மாகாணத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இது கண்டறியப்பட்டதில், உணவக உரிமையாளர் தண்டிக்கப்பட்டார்.
விளக்கு எரியக் கூடாது: வெர்சல்ஸ் அரண்மனையில் உள்ள படுக்கை அறையில் இருந்து 5 கி.மீ., தூரத்துக்கு விளக்கு எதுவும் எரியக் கூடாது என்ற சட்டம் 18-ஆம் நூற்றாண்டில் இருந்து அமலில் உள்ளது. 2022-இல் அந்தப் பகுதியில் நடக்க இருந்த கால்பந்து போட்டி 700 கி.மீ., துாரம் தள்ளி எதிரணியின் இடத்தில் நடத்தப்பட்டது.
பிரிட்டன் அரண்மனைக்கே திமிங்கலம், மீன்கள்: பிரிட்டனில் கடற்கரையையொட்டி, பிடிபடும் திமிங்கலம், உணவுக்குப் பயன்படும் பெரிய மீன்கள் நாட்டை ஆளும் ராணிக்குச் சொந்தம் என்று 1322-ஆம் ஆண்டு முதல் ஒரு சட்டம் அமலில் உள்ளது. இருந்தாலும், 2004-இல் வேல்ஸ் பகுதியைச் சேர்ந்த மீனவர் ராபர்ட் டேவிஸின் வலையில் 120 கிலோ எடை கொண்ட பெரிய மீன் கிடைத்தது. அவர் அரண்மனையில் ஒப்படைத்தார். ஆனால், ராணி உடனடியாக அந்த மீனவரையே அதனை பயன்படுத்திக் கொள்ள தந்துவிட்டார்.
சுயநினைவில் மணமக்கள்: ஜெர்மனியில் திருமணத்தின் போது, மணமக்கள் இருவரும் சுய நினைவில் இருத்தல் வேண்டும். யாரேனும் ஒருவர் சுய நினைவில் இல்லாத நிலையில், திருமணம் நடந்தால் அது செல்லாது.அரைகுறை அடையில் ஸ்கேட்டிங் கூடாது: ஸ்விட்சர்லாந்தில் அரைகுறை அடையில் ஸ்கேட்டிங் செய்ய தடை அமலில் உள்ளது. ஆனால், பொது இடத்தில் நிர்வாணமாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
திராட்சையை சாப்பிடலாம்: நார்வேயில் டிராம்ஸ், பின்மார்க், நார்ட்லாந்து பகுதிகளில் ஏராளமாக ஆரஞ்சு, மஞ்சள் வண்ணம் கொண்ட திராட்சைகள் அதிகம் உள்ளன. இவற்றை பறிக்கலாம். எடுத்துச் செல்ல அனுமதியில்லை. ஆனால், அங்கேயே சாப்பிடலாம். சில தோட்டங்களில் பறிக்கக் கூடாது என்று கூட தடை இருக்கும். ஆனால், அங்கு கீழே விழுந்ததை எடுக்கலாம். ஆனால், எடுத்துச் செல்ல முடியாது. மீறி எடுத்துச் சென்றால் தண்டனை நிச்சயம் உண்டு.
மெஸ்ஸி பெயர் வைக்கத் தடை: அர்ஜென்டினாவின் பிரபல கால்பந்து வீரர். லியோனல் மெஸ்ஸி. இங்கு ஒரு கட்டத்தில் மெஸ்லி என பெயர் வைக்கத் தடை விதிக்கப்பட்டது. இதை மீறி ஒரு குடும்பத்தினர் பெயர் வைத்தபோது, ஊர் நிர்வாகம் மாற்றக் கோரியது. மெஸ்ஸி என்பது குடும்பப் பெயர். அதனை சூட்டக் கூடாது. மாறாக, லியோனலை சூட்டிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.
திருடனை அடைக்கக் கூடாது: நெதர்லாந்தில் ஒருவரின் வீட்டை உடைத்து, திருடன் திருடிக் கொண்டிருக்கிறார். இந்தத் திருடரைப் பிடித்து, அறையில் தள்ளி பூட்டுப் போடக் கூடாது. இவ்வாறு செய்தால் தண்டனைக்குரிய குற்றம். திருட வந்த திருடனின் சுதந்திரத்தில் தலையிடுவது போன்றஅர்த்தம் என்று அந்த நாட்டு அரசு கூறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu