Management of Technical Vulnerabilities-தொழில்நுட்ப வளர்ச்சியின் அபாயத்தை எளிதில் தடுக்க முடியும்..!

Management of Technical Vulnerabilities-தொழில்நுட்ப வளர்ச்சியின் அபாயத்தை எளிதில் தடுக்க முடியும்..!
X

பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடந்த வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டத்தில் வயது முதிர்ந்த ஓய்வூதியரை உதவி பொதுமேலாளர் மதன் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சி எப்படி தவிர்க்க முடியாததோ அதேபோல், அதனால் ஏற்படும் அபாயமும் தவிர்க்க முடியாதது. ஆனால் எளிதாக தடுக்க முடியும்.

Management of Technical Vulnerabilities

தேனி மாவட்டம், பெரியகுளம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் சைபர் கிரைம் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது. பாரத ஸ்டேட் வங்கி மதுரை மண்டல துணை பொதுமேலாளர் அமீத்ரஞ்சன் தலைமை வகித்தார்.

உதவிப்பொதுமேலாளர் மதன் முன்னிலை வகித்தார். முதன்மை மேலாளர் சம்பத்குமார் வரவேற்றார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் ராஜாங்கம், ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர்கள் ஜெயசரவணன் (பெரியகுளம்), ரெங்கராஜன் (தேனி), வடகரை ஸ்டேட் வங்கி மேலாளர் செல்வம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள், மகளிர் குழுக்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Management of Technical Vulnerabilities

கருத்தரங்கில், சைபர் கிரைம் குற்றங்கள் எப்படியெல்லாம் நடக்கின்றன. அதனை தவிர்ப்பது எப்படி என்பது குறித்து திரையில் வரைபடக்காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. உதவிப்பொதுமேலாளர் மதன் பேசியதாவது: எப்போதுமே தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. தொழில்நுட்பங்கள் வளரும் போது, அதனை சார்ந்த குற்றங்களும் வளரத்தான் செய்யும். இது தான் உலக இயல்பு நிலை. வங்கி பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மயமானதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கும், வங்கிகளுக்கும் பல நல்ல விஷயங்கள் நடந்துள்ளன.

அதேபோல் டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடிகளும் உடனே சேர்ந்து வளர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடிகள் அபாயம் தான் என்றாலும் தவிர்க்க கூடிய விஷயம் தான். எப்படியெல்லாம் டிஜிட்டல் மோசடிகளை தவிர்க்கலாம் என்று வங்கிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளன. இதனை பின்பற்றினால் போதும். இன்று டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் இழந்த பணத்தை மீட்கும் அளவு தொழில்நுட்ப வசதிகளும் வளர்ந்துள்ளது.

Management of Technical Vulnerabilities

வாடிக்கையாளர்கள் வங்கிகள் தரும் அறிவுரைகளை பின்பற்றினால் மட்டும் போதும். பாதுகாப்பான பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி யுனோ ஆப் வசதிகளை எல்லாம் செய்து கொடுத்துள்ளது. அதில் மிகவும் ஸ்ட்ராங்க் ஆன பாஸ்வேர்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஸ்டேட் வங்கி ஆப் மூலம் நடக்கும் பரிவர்த்தனைகளில் மோசடி செய்வது இயலாத காரியம். எனவே வாடிக்கையாளர்கள் வங்கிகள் தரும் வழிகாட்டுதல்களை பின்பற்றுவதோடு, மோசடியில் சிக்கினால் உடனே வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு முழு தகவல்களையும் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடிகளை தடுத்து விடலாம். இவ்வாறு பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!