3 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றவர் கைது

3 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு   கடத்த முயன்றவர் கைது
X
கேரளாவிற்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் போடி சில்லமரத்துப்பட்டி ஜீவா காலனியை சேர்ந்தவர் வனத்துரை(வயது 30.) இவர் கேரளாவிற்கு அரிசி கடத்திச் செல்லும் போது முந்தல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் அரிசியினை கைப்பற்றினர். இவர் 2450 கிலோ அரிசியினை கடத்திச் சென்றார். அரிசியினை கைப்பற்றிய போலீசார், ஜீப்பையும் பறிமுதல் செய்தனர். வனத்துரையையும் கைது செய்யப்பட்டார். மற்றொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 கிலோ அரிசியினையும் கைப்பற்றினர். பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!