தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில் பெண்கள்

தேனி மாவட்டத்தில் திறந்தவெளி மதுக்கூடமாக மாறிய சாலைகள்: அச்சத்தில் பெண்கள்
X

க.விலக்கில் இருந்து  வருசைநாடு செல்லும் சாலையேரம்  அமர்ந்து மதுஅருந்தும் குடிமகன்கள் 

போலீஸார் சிறப்பு கவனம் செலுத்தி குடிமகன்களின் தொல்லையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண்கள் வலியுறுத்தியுள்ளனர்

தேனி மாவட்டத்தில் பல முக்கிய ரோட்டோரங்கள் திறந்தவெளி மதுபாராக மாறி வருகின்றன. போலீசாரும் இதனை கண்டுகொள்வதில்லை. இதனால் பெண்கள் நடமாட அச்சப்படுகின்றனர்.

தேனி மாவட்டத்தில் மட்டும் 102-க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஆனால் பார்களின் எண்ணிக்கை 60க்கும் குறைவாகவே உள்ளது. பார்கள் இருக்கும். டாஸ்மாக் கடை, பார்கள் இல்லாத டாஸ்மாக் கடை என்ற பாகுபாடு எதுவும் இல்லாமல் குடிமகன்கள் பாட்டில்களை வாங்கிக்கொண்டு, ஊரை ஒட்டிய ரோட்டோரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பாட்டில்களையும் அங்கேயே உடைத்து போட்டு விடுகின்றனர். போதையில் நிலை தடுமாறி தகறாறிலும் ஈடுபடுகின்றனர்.

இதனால் சாலையோரங்களில் செல்லும் பெண்களின் மிகவும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இது போன்றதொரு நிலைமை இந்தப்பகுதியில் மட்டும்தான் என்றில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக இதே நிலைதான் காணப்படுகிறது. போலீசாரை பொறுத்தவரை, குடிமகன்கள் ஊருக்குள் தொல்லை தராமல் வெளியில் சென்று விடுகிறார்களே என்று நிம்மதியடைந்து விடுகின்றனர். ஆனால், குடிமகன்களின் தொல்லையால் பொதுமக்கள் நிம்மதி இழந்து பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்ட காவல்கண்காணிப்பாளர் இந்த பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்தி குடிமகன்களின் தொல்லைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருவாரியான பெண்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
ai future project