/* */

மதுரை திருமங்கலம் கதி தேனிக்கும் ஏற்படும் முன் விழிக்குமா தமிழக அரசு?

மதுரை திருமங்கலம் கதி தேனிக்கும் ஏற்படும் முன் விழிக்குமா தமிழக அரசு? என்ற எதிர்பார்ப்பு தேனி மக்களிடம் ஏற்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

மதுரை திருமங்கலம் கதி தேனிக்கும் ஏற்படும் முன்  விழிக்குமா தமிழக அரசு?
X

மதுரை- தேனி- போடி மீட்டர்கேஜ் ரயில்பாதை அகல ரயில்பாதையாக மாற்ற 12 ஆண்டுகளுக்கு முன்னர் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது மக்கள் மீட்டர்கேஜ் ரயிலுக்கு கண்ணீருடன் விடை கொடுத்தனர். மெல்ல, மெல்ல நடந்த அகல ரயில்பாதை அமைக்கும் பணி 500 கோடிரூபாய்களை விழுங்கி தற்போது தேனி வரை நிறைவடைந்துள்ளது. வரும் 26ம் தேதி பிரதமர் மோடி மதுரை- தேனி அகல ரயில் பாதை சேவையை தொடங்கி வைக்கிறார். வரும் 27ம் தேதி காலை 8.30 மணிக்கு மதுரையில் இருந்து கிளம்பும் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியாக தேனிக்கு காலை 9.35 மணிக்கு வந்து சேருகிறது. மாலை 6.15க்கு தேனியில் இருந்து கிளம்பி இதே வழித்தடத்தில் 7.35க்கு மதுரை சென்று சேருகிறது.

ஆக காலை 9.35 மணிக்கும், மாலை 6.15 மணிக்கு தேனி நகருக்குள் உள்ள (10 நிமிடம் முன்னதாக அல்லது பின்னதாக) மூன்று ரயில்வே கேட்களும் மூடப்படும். ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் மூடப்பட்டிருக்கும். மிக, மிக பரபரப்பான இந்த நேரத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டால் தேனியின் நிலையை நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.

மதுரை ரோட்டில் மூடப்பட்டால், ரோட்டின் இருபுறமும் குறைந்தது தலா 4 கி.மீ., நீளத்திற்கு வாகனங்கள் நிற்கும். பெரியகுளம் ரோட்டிலும் இதே நிலை. பாரஸ்ட்ரோட்டில் சொல்லவே வேண்டாம். அது மிகுந்த நெரிசலான ரோடு. இப்படி தேனி இடியாப்ப சிக்கலில் மாட்டும். ரயில் சென்ற பின்னர் இதனை சரி செய்ய நீண்ட நேரம் பிடிக்கும்.தேனி மாவட்டத்தின் புவியியல் அமைப்பின்படி பெரும்பகுதி நகர, கிராம பகுதிகள் தேனியின் மறுபுறத்தில் தான் உள்ளன. இந்த பகுதியில் இருந்து மதுரை, தேனி அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள், குறிப்பாக ஆம்புலன்ஸ்கள் இந்த நேரத்தில் சிக்கிக் கொண்டால், நோயாளியின் கதி அதோகதி தான்.திருமங்கலத்தில் பஞ்சாயத்து யூனியன் ரோட்டில் ரயில்வே கேட் மூடப்பட்டால் மறுபுறம் இருந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உரிய நேரத்திற்கு மருத்துவமனைக்கு வர முடியாமல் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் மக்கள் போராட்டம் நடத்திய பின்னர், ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் சில சட்ட சிக்கல்களால் அந்த பணியும் தாதமாகி வருகிறது. இப்போது வரை திருமங்கலத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டால் ஆம்புலன்ஸ்கள் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகவே உள்ளது.

தேனியில் இதே போன்ற நிலை வந்து விடுமோ என போலீஸ் நிர்வாகம் கலக்கத்தில் உள்ளது. காரணம் தினமும் பல ஆம்புலன்ஸ்கள் மதுரை ரோடு வழியாகவே தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்கின்றன. மீட்டர் கேஜ் ரயில்பாதை மூடப்பட்ட போது, அதாவது 12 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட தற்போது தேனியில் வாகன போக்குவரத்தும், நெரிசலும் மூன்று மடங்கு அதிகரித்தள்ளது. பைபாஸ் ரோடுகளை உடனடியாக திறப்பது கூட இந்த நெரிசலுக்கு தீர்வை தராது. மேம்பாலம் கட்டியே ஆக வேண்டும். திட்டங்கள் முழுக்க தயாராகிவிட்ட நிலையில், உடனடியாக பெரியகுளம் ரோட்டிலும், மதுரை ரோட்டிலும் ரயில்வே மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என மாவட்ட போலீஸ் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளன. அரசு துரித நடவடிக்கை எடுத்து மேம்பாலம் கட்டினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Updated On: 24 May 2022 10:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது