மதுரை- தேனி அகலப்பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம்

மதுரை- தேனி அகலப்பாதையில்  ரயில்  என்ஜின் சோதனை ஓட்டம்
X

ஆண்டிபட்டி- தேனி இடையே அகல ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

மதுரை- தேனி இடையே அகலப்பாதையில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.

மதுரை- போடி அகல ரயில் பாதை பணிகள் தேனிவரை முழுமை பெற்றுள்ளன. நாளை மறுநாள் வியாழன் அன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் முழுமையான ரயிலை இந்த வழித்தடத்தில் இயக்கி சோதனை நடத்த உள்ளார். இந்த சோதனை முடிவுகள் தரமாக இருந்தால், வரும் ஏப்ரல் 14ம் தேதி (சித்திரை முதல் தேதி) முதல், மதுரை- தேனி அகல பாதையில் ரயில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னோட்டமாக இன்று ரயில் என்ஜின் மட்டும் இயக்கி பரிசோதனை நடத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி- தேனி இடையே புதிதாக அமைக்கப்பட்ட 16 கி.மீ. தொலைவுக்கு என்ஜின் இயக்கி பரிசோதனை நடத்தப்பட்டது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!