மானாவாரி அறுவடை மும்முரம் : விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி..!

மானாவாரி அறுவடை மும்முரம் : விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி..!
X

அறுவடையான கம்பு, உளுந்து வகைகளை தரம் பிரிக்கும் விவசாயிகள். இடம்: கண்டமனுார் வைகை பாலம்.

தேனி மாவட்டத்தில் மானாவாரி பயிர்கள் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.

ஓரளவு விலை கிடைப்பதால் விவசாயிகளுக்கு வருவாய் கிடைத்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் கிடைத்தது. இதனால் மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக பரப்பில் மானவாரி சாகுபடி விதைப்பு செய்யப்பட்டது.

விதைப்பு முதல் நல்ல மழையும், வெயிலும் மாறி, மாறி கிடைத்ததால் இந்த ஆண்டு விளைச்சல் நல்ல முறையில் உள்ளது. தற்போது ஆண்டிபட்டி, தேனி ஒன்றியங்களில் அறுவடை தொடங்கி உள்ளது. மூன்று ஆண்டுகளாக விளைச்சல் இல்லாமல் தவித்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டு விளைச்சலும் நல்ல முறையில் உள்ளது. விலையும் ஓரளவு நன்றாக கிடைக்கிறது.

குறிப்பாக மக்காச்சோளம் கிலோ 23 ரூபாய் வரையிலும், கம்பு 35 ரூபாய் வரையிலும், கேழ்வரகு 30 ரூபாய், தட்டைப்பயறு 50 ரூபாய், உளுந்து, பாசிப்பயறு 60 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. தற்போது ஈரப்பதம் இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் வியாபாரிகள் தோட்டங்களுக்கே சென்று கொள்முதல் செய்கின்றனர். இதனால் மானாவாரி விவசாயிகள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!