/* */

நவம்பர் 8ல் சந்திர கிரகணம், இதனால் நன்மையா..? தீமையா..?

வரும் நவம்பர் மாதம் 8ம் தேதி சந்திரகிரகணம் ஏற்படுகிறது.இதனால் நன்மையா..? தீமையா..? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

HIGHLIGHTS

நவம்பர் 8ல் சந்திர கிரகணம்,  இதனால் நன்மையா..? தீமையா..?
X

சந்திர கிரகணம் ஏற்படும் காட்சி. கோப்பு படம்.

இந்த வருடம் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 25ல், சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 8 ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. இந்த வருடம் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 25ல், சூரிய கிரகணம் முடிவடைந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் மிகவும் சிறிய அளவில் மட்டுமே தெரிந்தது. இதனால் கிரகண நேரத்தில் கூட பல கோயில்களில் நடைசாத்தப்படவில்லை. குறிப்பாக திருவண்ணாமலை கோயிலே சூரிய கிரகணத்தன்று திறந்து இருந்தது. இருப்பினும் பல கோயில்கள் கிரகணம் முடிந்த பின்னர் உரிய பரிகாரங்கள் செய்யப்பட்டே திறக்கப்பட்டன. இந்த நிலையில் வரும் நவம்பர் 8 ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. 15 நாட்களில் இரண்டு கிரகணம் வருவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால், இதுவரை அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஜோதிடர்களின் கணிப்பை அறிஞர்கள் புறக்கணித்தாலும், மக்கள் ஜோதிடத்தையே நம்புகின்றனர். வரும் நவம்பர் மாதம் எட்டாம் தேதி சந்திர கிரகணம் ஏற்படுவது அபூர்வ நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. காரணம் மீண்டும் ஒருமுறை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி 2023ஆம் ஆண்டு தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். சந்திர கிரகணம் என்பது அறிவியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். அதன்படி, சந்திர கிரகணம், நவம்பர் 8 ம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அதிகாலை 5.38 மணிக்கு தான் உதயமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. சந்திரகிரகணத்தை பொதுமக்கள் காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் நேரத்தில் கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை, செய்யக்கூடியவை:

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதால், அந்த நேரங்களில், கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு, ஏழைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும்.

Updated On: 30 Oct 2022 4:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  6. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  7. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  8. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...