லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டம்: முதல்வரை சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு

லோயர்கேம்ப்- மதுரை குடிநீர் திட்டம்: முதல்வரை சந்தித்து முறையிட விவசாயிகள் முடிவு
X

பாரதீய கிஷான் சங்க விவசாயிகள் தேனி கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

லோயர்கேம்ப்-மதுரை குடிநீர் திட்டத்தை நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் செயல்படுத்த வேண்டும் என முதல்வரை சந்தித்து முறையிட முடிவு.

பாரதீய கிஷான் சங்க தேனி மாவட்ட தலைவர் சதீஷ்பாபு தலைமையில் விவசாயிகள் கலெக்டர் முரளீதரனை சந்தித்தனர். அப்போது லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு 1296 கோடி ரூபாய் செலவில் குழாய் வழியாக குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. இப்படி கொண்டு சென்றால் தேனி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும்.

எனவே லோயர்கேம்ப்பில் இருந்து வைகை அணை வரை ஆற்றின் மூலமே தண்ணீர் கொண்டு வந்து, வைகை அணையில் இருந்து குழாய் மூலம் எடுத்துச் செல்லலாம். இந்த திட்டத்தை தேனி, மதுரை மாவட்டங்களின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்காமல் செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஏப்., 30ம் தேதி தேனிக்கு வரும் முதல்வரை சந்தித்து முறையிடவும் முடிவு செய்துள்ளோம். தேனிக்கு வரும் முதல்வரை விவசாயிகள் சந்திக்க கலெக்டர் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!