தேனி உழவர்சந்தையில் குறைந்த தக்காளி விலை; சின்ன வெங்காயம் ரூ.135க்கு விற்பனை

தேனி உழவர்சந்தையில் குறைந்த தக்காளி விலை;  சின்ன வெங்காயம் ரூ.135க்கு விற்பனை
X

பைல் படம்.

tomato price - தேனி உழவர்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 135 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிலோ 110 ரூபாயினை தாண்டினாலும், தேனி உழவர்சந்தையில் 100 ரூபாய் வரை மட்டுமே விற்கப்பட்டது. ஓரிரு நாட்களில் இதன் விலையும் குறைந்து கடந்த நான்கு நாட்களாக கிலோ 82 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. இன்று காலை கிலோ 70 ரூபாய் ஆக குறைந்தது. தரமான தக்காளி 70 ரூபாய்க்கு கிடைக்கிறது.

ஆனால் சின்னவெங்காயம் தொடர்ந்து கிலோ 135 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரையில் வெளிமார்ககெட்டில் கிலோ சின்ன வெங்காயம் 160 ரூபாயினை எட்டி விட்டது. பொதுவாகவே இந்த சீசனில் அனைத்து வகை காய்கறிகளின் விலைகளுமே சற்று அதிகரித்துள்ளன. தேனி உழவர்சந்தை விலை நிலவரம் (கிலோவிற்கு ரூபாயில்) குறிப்பிடப்பட்டுள்ளது.

கத்தரிக்காய்- 40, வெண்டைக்காய்- 40, கொத்தவரங்காய்- 38, சுரைக்காய்- 20, புடலங்காய்- 35, பாகற்காய்- 60, பீர்க்கங்காய்- 45, முருங்கைக்காய்- 40, பூசணிக்காய்- 22, பச்சைமிளகாய் (உருட்டு)- 80, அவரைக்காய்- 50, தேங்காய்- 25, உருளைக்கிழங்கு- 26, சேப்பங்கிழங்கு- 64, மரவள்ளிக்கிழங்கு- 35, கருவேப்பிலை- 36, கொத்தமல்லி- 35, புதினா- 50, பெல்லாரி- 27, இஞ்சி- 250, வெள்ளைப்பூண்டு- 280, பீட்ரூட்- 32, நுால்கோல்- 54, முள்ளங்கி- 25, முருங்கை பீன்ஸ்- 98, முட்டைக்கோஸ்- 30, கேரட்- 54, டர்னிப்- 35, சவ்சவ்- 26, காலிபிளவர்- 35, மொச்சக்காய்- 55, துவரங்காய்- 30, தட்டாங்காய்- 75, மக்காச்சோளக்கதிர்- 50, கீரைவகைகள்- 25.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!