தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தேனி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
X

பைல் படம்.

நாளை கண்ணகி கோயில் விழா நடைபெறும் நிலையில் தேனி மாவட்டத்தி்ற்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சித்ராபவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் விழா நடக்கிறது. இந்த கோயில் விழா ஏற்பாடுகளை தமிழக, கேரள அரசுகள் இணைந்து செய்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே தேனி மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மட்டும் குறைந்த அளவு பணியாளர்களுடன் செயல்படும். இந்த விடுப்பு வரும் மே 7ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்பட்டு ஈடுகட்டப்படும் என கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ஆத்தூர் அருகே ஆசிரியர் வீட்டில் டூவீலர் திருட்டு! போலீசார் விசாரணை