அன்லிமிட் சாப்பாடு..கிளம்பும் போது கையிலே காசு:உள்ளாட்சி வேலைவாய்ப்பு
காலை ஆறு மணி காபி முதல்... இரவு பத்து மணி டிரிங்ஸ் வரை... சாப்பிட எல்லாமே அன்லிமிட்.... புறப்படும் போது கையில் காசு.... கவுன்சிலர் ஓட்டு கேட்பு பிரசசார வேலைக்கு சென்றால் இவ்வளவு சலுகையும் கிடைக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து விட்டது. கட்சி சின்னம் ஒதுக்கீடு, கூட்டணி கட்சிகளின் மறைமுக பேச்சுவார்த்தை, வேட்புமனு வாபஸ் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அத்தனை வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.
பிரச்சாரத்திற்கு தங்களுடன் ஒட்டுக்கேட்டு வருபவர்களுக்கு... காலை 6 மணி காபி முதல் இரவு 10 மணி டிரிங்ஸ் வரை எல்லாமே அன்லிமிட்.... அன்றைய பிரச்சார வேலைகளை பொறுத்து தினம் பணி முடித்து புறப்படும் போது, 500 ரூபாய், 750 ரூபாய், ஆயிரம் ரூபாய் என தினசரி பார்த்த வேலைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் தற்காலிக பணியாக இருந்தாலும், பிரச்சார வேலை வாய்ப்பு தான் தற்போதய தமிழகத்தின் ஹைலைட் வேலை வாய்ப்பாக உள்ளது. இதனால் பல முக்கிய வேலைகளுக்கு பலரும் பிப்., 19ம் தேதி வரை விடுமுறை விட்டு விட்டனர்.
தற்போது ஒரே பணி பிரச்சாரம் தான். சந்தைக்கு காய்கறி விற்கும் விவசாயி முதல், கட்டட பணிக்கு செல்லும் தொழிலாளி வரை வெள்ளை சட்டை, வேஷ்டி, கட்சி துண்டுகளை கட்டிக்கொண்டு வரிந்து கட்டி பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரண்டு ஆண்டு கொரோனா கால முடக்கத்திற்கு பின்னர், தமிழகத்தில் பொருளாதார சுழற்சி வேகமாக உள்ளது என அரசியல் கட்சியினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu