கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்

கம்பம் அருகே மகன் உயிரை பறித்த தந்தையின் மதுப்பழக்கம்
X
கம்பம் அருகே, தந்தையை மதுப்பழக்கத்தில் இருந்து மீட்க முடியாத துயரத்தில் பிளஸ் 2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள கம்பம் மெட்டு ரோட்டில் வசிப்பவர் சுல்த்தான் இப்ராஹிம். இவர் மதுவிற்கு அடிமையானவர். இவரது மகன் அப்துல்கபூர், 17. பிளஸ் 2 மாணவரான இவர், தந்தையிடம் மதுப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

எனினும், தந்தை கேட்கவில்லை. இதனால் மனம் உடைந்த அப்துல்கபூர், வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி