தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு லயன்ஸ் கிளப் சார்பில் உபகரணம் வழங்கல்

தேனி அரசு மருத்துவக்கல்லூரிக்கு லயன்ஸ் கிளப் சார்பில் உபகரணம் வழங்கல்
X
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவுமனைக்கு, லயன்ஸ் கிளப் சார்பில், 15,லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை, கலெக்டர் முரளீதரன் வழங்கினார்.
தேனி அரசு மருத்துவக்கல்லுாரிக்கு, லயன்ஸ்கிளப் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன.

தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை, கலெக்டர் முரளீதரன் தொடங்கி வைத்தார். அவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் லயன்ஸ் கிளப் சார்பில் வழங்கப்பட்ட 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நவீன உபகரணங்களை, மருத்துவமனை டீன் பாலாஜிநாதனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், கோல்டு மண்டல தலைவர் ராஜமோகன், தேனி ராயல் லயன்ஸ் சங்க பட்டய தலைவர் செல்வகணேசன், தலைவர் பாண்டியராஜ், கண்ணன், லயன்ஸ் மாவட்ட ஆளுநர் மணிகண்டன் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி