மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கொலை செய்த கணவருக்கு  ஆயுள் தண்டனை
X
கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை நடுரோட்டில் வெட்டி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

போடியில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

போடி தென்றல்நகரை சேர்ந்தவர் வீரக்குமார்( 38.) இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு மே 6ம் தேதி தனது மனைவியை நடுரோட்டில் வைத்து வெட்டிக் கொலை செய்தார். போடி போலீசார் வழக்கு பதிவு செய்து, வீரக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று தீர்ப்பளித்த நீதிபதி வெங்கடேசன், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, வீரக்குமாருக்கு ஆயுள்தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!