பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்

பிரண்டை செடியின் மருத்துவ பயன்கள்

பிரண்டை செடி

பிரண்டையை என்னென்ன வகையில் பயன்படுத்தலாம் என்பதை காண்போம்

உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து உண்டு, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர். அந்த விதத்தில், நாம் மறந்துவிட்ட ஒரு மருத்துவ குணமிக்க தாவரம்தான் பிரண்டை. பிரண்டையின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் மகத்துவங்களை அறிந்து கொள்ளலாம்.

இளம் பிரண்டையை நெய்விட்டு வதக்கி அடைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும். அடிபட்டு ஏற்படும் வீக்கத்தின் மேல் பிரண்டையை அரைத்து கட்டி வர வீக்கம் குறையும்.. பிரண்டை துவையல் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. பிரண்டை தண்டை நெய்விட்டு வறுத்து அரைத்து சாப்பிட்டு வர பெருங்குடல் புண் குணமாகும்.

பிரண்டை சாப்பிடுவதால் நரம்பு தளர்ச்சி நீங்கி ஆண்மை பெருகும். பிரண்டை துவையல் செருமான கோளாறு, மலச்சிக்கலை போக்குகிறது. பிரண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மாதவிடாய் கால வலியை குறைக்க உதவும்.

இதனால் சித்த மருத்துவத்தில் பிரண்டை செடிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். பிரண்டையில் உள்ள சில சத்துக்களை பிரித்து அலோபதி மருத்துவத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிராமங்களில் கூட பிரண்டை பயன்பாடு மிக, மிக குறைவாக உள்ளது. மிகவும் இந்த அற்புதமான செடியினை இளம் பெண்கள் மட்டுமல்ல... இளம் தலைமுறையே சரியாக பயன்படுத்துவதில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.



Tags

Next Story