சும்மா மதுரைக்கு போயிட்டு வருவோம்... தேனி மக்கள் உற்சாக ரயில் பயணம்...
ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு ரயிலில் பயணம் செய்த தேனி கலெக்டருடன் பயணிகள் உற்சாகமாக போட்டோ எடுத்துக் கொண்டனர்.
தேனி மாவட்டத்தில் சுற்றுலாத்தளங்களுக்கும், ஆன்மீகத்தலங்களுக்கும் பஞ்சம் இல்லை. அருவிகள், அணைகள், மலைகள், ஆறுகள், பூங்காக்கள், பல ஆயிரம் ஆண்டுகளை கடந்த வழிபாட்டுத்தலங்கள் என எதற்குமே தேனி மாவட்டத்தில் பஞ்சம் இல்லை. இவ்வளவு இருந்தும் தேனி மாவட்ட மக்களுக்கு ரயில் புதுசு. அதுவும் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி ரயில்வே ஸ்டேஷன்களின் நவீன கட்டமைப்பும், மிகவும் புதிய சுகாதாரம் நிறைந்த அகல ரயிலும் தேனி மக்களுக்கு புதுசாக உள்ளது.
தேனி- மதுரை ரயில் கட்டணமும் (மதுரை- தேனி இடையே 75 கி.மீ., துாரம் பயணிக்க) 45 ரூபாய் மட்டுமே. எனவே மக்கள் பொழுது போக்கிற்காக ஒன்று மதுரைக்கு போகும் போது, அல்லது மதுரையில் இருந்து திரும்பும் போது ரயிலில் பயணிக்க திட்டமிடுகின்றனர். இதனால் மதுரை- தேனி ரயிலில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் ரயில் டிக்கெட் கிடைக்காமலும், ரயிலி்ல் இடம் கிடைக்காமலும் திரும்புகி்ன்றனர். அந்த அளவு வரவேற்பு உள்ளது. மக்களை வரவேற்பினை கண்ட ரயில்வே நிர்வாகம் தினமும் இருமுறை மதுரை- தேனி இடையே ரயில் விட தீர்மானித்துள்ளது.
தேனி மாவட்ட எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி.,க்களும் ரயில்வே அதிகாரிகளிடம் முறையிட்டால் இந்த வேலை சுலபமாக முடிந்து விடும். இதற்கிடையில் ரயில் பயணத்தை ஊக்குவிக்கவும் மக்களை குஷிப்படுத்தவும், தேனி கலெக்டர் முரளீதரனும் ரயிலில் பயணம் செய்கிறார். ஆண்டிபட்டி ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த அவர், திடீரென அங்கிருந்து ரயில் ஏறி தேனி வரை வந்தார். ரயிலில் கலெக்டரை பார்த்த மக்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி, அவரோடு படம் எடுத்து மகிழ்ந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu