மீண்டும் வருமா...ஒத்த பைசா பிஸ்கெட்...

மீண்டும் வருமா...ஒத்த பைசா பிஸ்கெட்...
X

பைல் படம்

நாங்க இதை பொடி பிஸ்கட்னு சொல்லுவோம். அஞ்சி காசுக்கு மூணு.

90 களின் காலகட்டத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு இது தான் அன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸ்...செட்டியாரின் பலசரக்கு கடையில் தகர டப்பாவில் இந்த பிஸ்கட் மூடி வைத்திருப்பார். ஒத்த பைசா பிஸ்கட், 5 பைசாக்கு 5 பிஸ்கட், பத்து பைசாக்கோ, இருபது பைசாக்கோ பிஸ்கட் வாங்கி யூனிபார்ம் பாக்கெட்டில் போட்டு பள்ளிக்கூடத்திற்கு போகும் வழியில் ஒவ்வொரு பிஸ்கட்டாக வாயில் போடுவோம்,

வாயில் போட்ட ஒத்த பிஸ்கட்டை தின்னுவது இல்லை. உமிழ்நீரில் அந்த பிஸ்கட் குழைந்து போகும் பிறகு அப்படியே தொண்டைய வருடியபடி சுவையுடன் ருசித்து விழுங்குவது தான் இந்த பிஸ்கட் தின்னும் முறை. இது எழுதப்படாத உண்ணும் முறை .

சில நேரங்களில் பள்ளிக்கு வந்த பிறகு மீதம் பிஸ்கட் டவுசர் பாக்கெட்டில் இருந்தால், அதை சக பள்ளி தோழனுக்கு கொடுப்போம்.. சும்மா இல்லை.? பண்ட மாற்று முறையில்... நான் பிஸ்கட் தந்தால் நீ, சிலேட் குச்சி, சிலேட் அழிக்கும் பச்சிலை, அல்லது சின்ன கச்சி (சின்ன கோலி) இதில் ஏதாவது ஒன்று தரவேண்டும்...

இந்த காலகட்டத்தில் பர்கர், ஷவர்மா, சிக்கன் ரோல் , லேஸ் ஆகியவை இன்றைக்கு பேவரிட் ஸ்நேக்ஸின் ஆளுமையாக மாறி விட்டது. இந்த காலகட்டத்தில் ஒத்த பைசா பிஸ்கட் மறக்கப்பட்டும், மறைக்கபட்டும் உள்ளது. இந்நிலையில் பல பெரிய கம்பெனிகள் எல்லாம் இந்த சிறிய ரக பிஸ்கெட்டை தற்போது மீண்டும் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றன. விலை சற்று அதிகமாக இருந்தாலும், இந்த சிறிய பிஸ்கெட்டினை குழந்தைகள் விரும்பி சாப்பிட தொடங்கி உள்ளனர்.

இதனால் இன்றைய பல சரக்கு கடைகள் முதல்... சூப்பர் மார்க்கெட் வரை எல்லா இடங்களிலும் விற்கப்படுகிறது. இருப்பினும் 90ம் ஆண்டுகளில் ஒத்த பைசா பிஸ்கெட் செலுத்திய ஆளுமை மீண்டும் திரும்ப வாய்ப்புகள் இல்லை. ஒத்த பைசா பிஸ்கட்டை ருசித்து தின்ற கடைசி தலைமுறையும் நாம் தான் என்ற நிலை உருவாகி விடுமோ என்ற சந்தேகமும் இப்போது வாழும் 90 கிட்ஸ்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!