கொரோனா போராட்டமே முடிவுக்கு வரல.. மீண்டும் மிரட்டுது டெங்கு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி க.மயிலாடும்பாறை ஒன்றிய கிராமங்களில் கொசுமருந்து தெளிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
தேனி மாவட்ட பொதுமக்கள் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து இன்னமும் மீண்டு வரவி்ல்லை. மூன்றாவது அலைக்கான அறிகுறிகள் தென்படத்தொடங்கி உள்ளன.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அதற்குள் அடுத்த சோதனையாக டெங்கு பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தேனி மாவட்டத்தில் பல கிராம ஊராட்சிகளில் டெங்கு பாதிப்புகள் அதிகரி்த்து வருகின்றன. குறிப்பாக ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் கடமலை- மயிலை ஒன்றியம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.
இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கிராம ஊராட்சி தலைவர்களை கூட்டி ஆலோசனை கூட்டம் நடத்தி, அனைத்து கிராமங்களிலும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
முதல் கட்ட பணியாக டெங்கு கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu