100 அடி கிணற்றில் விழுந்த சிறுத்தை: தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்பு
கிணற்றுக்குள் இருந்து மீட்கப்படும் போது வலையில் இருந்து தாவிக்குதித்த சிறுத்தை.
Today Theni News -தேனியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ளது பூதிப்புரம் கிராமம். இந்த கிராமத்தை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இந்த கிராமத்திற்குள் அடிக்கடி மான்கள், இதர வனவிலங்குகள் வருவது உண்டு. முதன் முறையாக இந்த கிராமத்தை ஒட்டி உள்ள சன்னாசி கோயில் மலையடிவாரத்தில் உள்ள 100 அடி ஆழம் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. இங்கு வேலை பார்த்த பணியாளர்கள் இதுகுறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண்குமார், தேனி நிலைய அலுவலர் பழனி தலைமையில் ஏழு பேர் கொண்ட தீயணைப்பு படையினர் வந்து தொட்டில் வலை கட்டி சிறுத்தையை மீட்டனர். தொட்டில் வலையில் கிணற்றின் மேல் பகுதிக்கு வரும் போது, தீயணைப்பு படையினர் அத்தனை பேரும் பத்திரமாக காருக்குள் அமர்ந்து கொண்டு வலையை மேலே துாக்கினர். வலை கிணற்றின் மேல் பகுதிக்கு வந்ததும், சிறுத்தை தாவி மீண்டும் வனத்திற்குள் ஓடி மறைந்தது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu